மணப்பாறை நகராட்சி 16வது வார்டில் கழிவுநீர் வடிகால் அமைத்து தர வலியுறுத்தி சிபிஐ (எம்.எல்) அறிவித்த போராட்டம் வாபஸ்

0 9
Stalin trichy visit

திருச்சி, நவ.28  மணப்பாறையில் நகர பகுதியில் 16 வது வார்டு சாய்நகரில் கழிவுநீர் வடிவால்பாதை வசதி அமைத்து தர நகராட்சி அலுவலகம் முன்பு சிபிஜ (எம்.எல்) போராட்டம்/ அதிகாரிகள் பேச்சுவார்த்தை போராட்டம் வாபஸ்

திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சிக்கு உட்பட்ட 16 வது வார்டு சாய்நகரில் 100 க்கும்
மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இந்தபகுதியில் நகராட்சி நிர்வாகம் சார்பில் கழிவுநீர் வடிகால்பாதை வசதி ஏற்படுத்தி தரவில்லை காவேரி குடிநீர் வசதியும் இல்லை இந்த பகுதி அனைத்து குடியிருப்பு கழிவுநீரும் வாகை குளத்திற்கு சென்றுவந்தது இந்த நிலையில் காலியாக உள்ள இடத்தை தனிநபர் ஒருவர் தனது பட்டா நிலம் என்று
கூறி சாய்நகர் பகுதியிலும் வாகைகுளம் பகுதிலும் தடுப்பு சுவர் எழுப்பியதால் கழிவுநீர் தற்போது சாய்நகர் குடியிருப்பு பகுதியிலயே தேங்கும் நிலை ஏற்பட்டது

இந்த நிலையில் நிரந்தர தீர்வு வேண்டி நகராட்சி அலுவலகம் முன்பு சிபிஐ(எம்.எல்) கட்சியின் சார்பாக பொதுமக்களுடன் தர்ணா போராட்டம் அறிவிக்கபட்டு இருந்தது
நகராட்சி நிர்வாகம் சார்பாக பேச்சு வார்த்தைக்கு அழைப்பு விடுக்கபட்ட நிலையில் போராட்டம் தற்காலிகமாக வாபஸ்பெறபட்டது 26-11-2026 செவ்வாய்
நகராட்சி அலுவலகத்தில் உதவி பொறியாளர் பிரகாஷ் நகராட்சி சுகாதார அலுவலர்
முத்துகனேஷ் தலைமையில் நடைபெற்ற அமைதி பேச்சுவார்தையில் CPI(ML)
நகர செயலாளர் P. பாலு மாவட்டகுழு உறுப்பினர்கள் M.தங்கராஜ்.
B.பாலகுமரன். R.ஜோதிபாசு மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.இறுதியில்
மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு கொண்டு சென்று அந்தபகுதி கழிவுநீர் பாதைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தி தரப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இறுதியாக காவேரி குடிநீர் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என பல்வேறு கோரிக்கை அடங்கிய மனுவை நகராட்சி அதிகாரிகளிடம் கொடுக்கபட்டது

Leave A Reply

Your email address will not be published.