சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் பிறந்தநாள்: அமைச்சர்கள், துணை சபாநாயர், எம்.எல்.ஏக்கள் மாலை அணிவித்து மரியாதை
திருச்சி, ஜூன் 1 சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் பிறந்தநாள் – திருச்சி மணிமண்டபத்தில் அமைச்சர்கள், துணை சபாநாயகர், சட்டமன்ற உறுப்பினர்கள் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நீதிக் கட்சியின் வைரத்துண் என்று அழைக்கப்படும் சர்.ஏ.டி.பன்னீர்செல்வத்தின்
பிறந்த நாளை முன்னிட்டு திருச்சியில் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள அவரது மணிமண்டபத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறை மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் ராஜமோகன், அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், சட்டமன்றத் துணைசபாநாயகர் ரவிசங்கர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் விக்னேஷ், அதிமுக லால்குடி சட்டமன்ற உறுப்பினர் லீமாரோஸ் ஆகியோர் சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்வில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீக்தயாள், மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.