குமுளூர் வேளாண்மை கல்லூரியில் விளையாட்டு விழா : மாவட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் பங்கேற்பு
திருச்சி, ஜூன் 5 திருச்சி மாவட்டம் லால்குடி அருகே குமுளூர் ஊராட்சியில் உள்ள வேளாண்மை கல்லூரியில் 10 ஆம் ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தின் கீழ் இயங்கும் லால்குடி அருகே குமுளூர் வேளாண் கல்வி நிறுவனம் கடந்த 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இக்கல்வி நிறுவனத்தில் இரண்டு ஆண்டு வேளாண் பட்டய படிப்பு மற்றும் 4 ஆண்டு இளங்கலை வேளாண் பட்டபடிப்பு பயிற்றுவிக்கப்படுகிறது. தற்போது இக்கல்வி நிறுவனத்தில் சுமார் 500 க்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் பயிற்று வருகின்றனர். ஒவ்வொரு வருடமும் மாணவ மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டு விளையாட்டு விழா சிறப்பாக நடைப்பெற்று வருகிறது. நடப்பாண்டிற்க்கான 10 ஆம் ஆண்டுவிளையாட்டு விழா சிறப்பான முறையில் நடைப்பெற்றது. இந்த விழாவிற்கு திருச்சி மாவட்டத்தின் உதவி காவல்துறை கண்காணிப்பாளர் பனாவத் அரவிந் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புறையாற்றினார். முன்னதாக இக்கல்வி நிறுவனத்தின் முதல்வர் முனைவர் மு. அசோகன் வரவேற்புரையாற்றினார்,மற்றும் இக்கல்வி நிறுவனத்தின் உடற்கல்வி இயக்குனர் முனைவர் K.சரவணகுமார் நன்றி உரை ஆற்றினார்.
இவ்விழாவில் மாணவர்கள் நான்கு அணிகளாக பிரிக்கப்பட்டு (பச்சை, சிகப்பு, மஞ்சள் மற்றும் ஊதா) இவ்வணிகளுக்கு இடையே விளையாட்டு போட்டிகள் சிறப்பாக நடைபெற்றது. இந்த போட்டியில் பச்சை நிற அணி அதிக புள்ளிகளை பெற்று முதல் இடத்திலும் மஞ்சள் நிற அணி இரண்டாவது இடத்திலும் வெற்றி பெற்றனர். அதிக புள்ளி பெற்று முதல் இடம் பிடித்த பச்சை அணிக்கு சிறப்பு விருந்தினர் திரு. பனாவத் அரவிந் T.P.S அவர்கள் சுழற்க்கோப்பை வழங்கி கௌரவித்தார். மாணவர்கள் பிரிவில் அதிக புள்ளிகளை பெற்று முதல் இடத்தை பிடித்த இரண்டாம் ஆண்டு மாணவன் முனியப்பன் மற்றும் மாணவிகள் பிரிவில் அதிக புள்ளிகளை பெற்று முதல் இடத்தை பிடித்த இரண்டாம் ஆண்டு மாணவி அபிநயாக்கு கோப்பைகளை வழங்கினார்.
சிறப்பு விருந்தினர் பனாவத் அரவிந் உரையாற்றும்போது இக்கல்வி நிறுவனத்தின் மாணவ மாணவிகள் கல்வி மட்டுமல்லாது விளையாட்டிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள், அவர்களை அடுத்தடுத்து மாவட்ட மற்றும் மாநில அளவில் விளையாட்டு போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்தினார். இந்த விளையாட்டு மைதானமானது மிகவும் நேர்தியாக மின்ஒலி வசதியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த விளையாட்டு மைதானம் மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளை நடத்த உகந்தது என்றும் கூறினார் மேலும், விளையாட்டு போட்டிகளில் வெற்றிப்பெற்ற மாணவ மாணவிகளை இக்கல்லூரியின் முதலவர், பேராசிரியர்கள் மற்றும் கல்வி பயிற்றுனர்கள் வாழ்த்தினார்.