தையல் கடை உரிமையாளர் தூக்கிட்டு தற்கொலை
திருச்சி ஜூன் 10- திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நாயுடுபுரத்தை சேர்ந்தவர் தேவபிரபு (வயது 47) இவர் தற்சமயம் கருமண்டபம் புன்னகை வீதி பகுதியில் வீடு எடுத்து தங்கி உள்ளார். இவர் தையல் கடை வைத்து நடத்தி வருகிறார்.
இந்நிலையில் தையல் கடையில் நஷ்டம் ஏற்பட்டத்தை தொடர்ந்து மன உளைச்சலில் காணப்பட்ட தேவ பிரபு நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அறையில் மின்விசிறியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சிடைந்த மனைவி சரோஜினி உடனடியாக செசன்ஸ் கோர்ட் போலீசில் புகார் தெரிவித்தார். தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தூக்கில் பிணமாக தொங்கிய தேவ பிரபுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்துசெசன்ஸ் கோர்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.