மணல் திருட்டில் ஈடுபட்ட இரண்டு பேர் கைது
திருச்சி ஜூன் 10 திருச்சி கல்லணை ரோடு காவேரி ஆற்று பகுதியில் மணல் திருட்டில் சிலர் ஈடுபட்டு வருவதாக திருவரங்கம் போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரம் தலைமையில் போலீசார் அங்கு சென்று பார்த்த போது அரை யூனிட் மணலை 3 பேர் திருடிக் கொண்டிருந்தனர்.
இதையடுத்து போலீசார் அவர்களை பிடிக்க முயன்ற போது ஒருவர் தப்பிவிட்டார். பின்னர் பிடிபட்ட இருவரிடம் விசாரணை செய்தபோது மண்ணச்சநல்லூர் வாத்தலை பகுதியை சேர்ந்த சிவராஜ் (வயது 35) குடி தெருவை சேர்ந்த கார்த்திகேயன் (வயது 28) என்பது தெரிய வந்தது. இதையடுத்து இரண்டு பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து அரை யூனிட் மணலை பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும் தப்பி ஓடிய செங்கல் சூளை அதிபரை போலீஸ் தேடி வருகின்றனர்.