தமிழ்நாட்டில் பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக உதயநிதி கூறுவதை ஏற்க முடியாது – துரைவைகோ எம்.பி. பேட்டி

0 41
Stalin trichy visit

திருச்சி, ஜூன் 18  தமிழ்நாட்டில் பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக உதயநிதி கூறுவதை ஏற்க முடியாது – திருச்சி விமான நிலையத்தில்துரைவைகோ எம்.பி. பேட்டி

திருச்சி விமான நிலையத்தில் மதிமுக முதன்மை செயலாளரும் எம்.பியுமான துரை வைகோ செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில்,

திருச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய புதிய திட்டங்கள் குறித்து இன்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டேன்.

தமிழக அரசு நேற்று வெள்ளை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் 13 லட்சம் கோடி கடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்கள் பல துறைகளில் சில தவறுகள் நடந்ததன் காரணமாக தமிழக அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதையும் அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளார்கள் இந்த சூழலில் அவர்களுடைய தேர்தல் வாக்குறுதிகளை புதிய திட்டங்கள் நிறைவேற்றுவது உள்ளிட்டவை குறித்து அவர்கள் ஆலோசனை செய்து முடிவெடுப்பார்கள்.

அதிமுகவில் எம்.எல்.ஏக்களாக தேர்வானவர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு தான் த.வெ.கவில் இணைந்துள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் அக்கட்சியை சேர்ந்தவர்கள் விலகுவது ஏன் என்பதை அதிமுக தலைமை தான் ஆராய வேண்டும்.

பா.ஜ.க போல் த.வெ.கவும் Washing Machine தானா என்கிற கேள்விக்கு Washing Machine விமர்சனம், குதிரை பேரம் விமர்சனம் அனைத்து கட்சிகள் மீதும் உள்ளது. ஊழல் குற்றச்சாட்டுகளுக்குள்ளான நபர்கள் த.வெ.கவில் இணையும் போது த.வெ.க தலைமை கவனத்துடன் இருக்க வேண்டும்.

மதிமுக வை சேர்ந்த இரண்டு எம்.எல்.ஏக்கள் எங்கள் கட்சி கிடையாது. அவர்கள் எங்கள் கட்சியில் இருந்து ராஜினாமா செய்துவிட்டு திமுகவில் இணைந்து அதன் பின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டார்கள் அவர்கள் திமுகவை சேர்ந்தவர்கள். தற்போது  அவர்கள் எங்கள் கட்சியில் இருக்கிறார்கள். சூழலுக்கு ஏற்ப என்ன முடிவெடுப்பது என்பது குறித்து ஆலோசிப்போம் எங்களுடைய பொதுக்குழுவில் கூட்டணி குறித்தான முடிவு எடுக்கப்படும்.

கடந்த காலங்களைப் போலவே கடந்த ஒரு மாதமும் பாலியல் குற்ற சம்பவங்கள் தமிழ்நாட்டில் நடந்து வருகிறது அவை முற்றிலுமாக தடுக்கப்பட வேண்டும் த.வெ.க. அரசும் அதற்கான பல முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது.
தமிழ்நாட்டில் பாலியல் குற்றச்சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக உதயநிதி ஸ்டாலின் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

வைகோ – ஆதவ் அர்ஜீனா சந்திப்பில் எந்த அரசியலும் பேசவில்லை

த.வெ.க வும் திராவிட இயக்கம் தான். அதிமுக எந்த நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்டதோ அந்த வேலையை நாங்கள் செய்கிறோம் என த.வெ.கவினர் கூறுகிறார்கள் அப்படி அவர்கள் கூறுவது உண்மை தான் என்றார்.

Leave A Reply

Your email address will not be published.