மருங்காபுரி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் 51 மனுக்களுக்கு உடனடி தீர்வு

0 26
Stalin trichy visit

திருச்சி, ஜூன். 19  மணப்பாறை அருகே  மருங்காபுரியில் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி . பல்வேறு துறையைச் சார்ந்த அதிகாரிகள் பங்கேற்பு. இதில் 530 மனுக்கள் பெறப்பட்டன .51 மனுக்கள் மீது உடனடி தீர்வு.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே மருங்காபுரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஜமாபந்தி .வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை
வருவாய் தீர்வாயம் பசலி – 1435 நேற்று துவரங்குறிச்சி,வளநாடு மருங்காபுரி ஆகிய பகுதி பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட வருவாய் அலுவலர் பாலாஜி தலைமையில் 16, 17, 18, ஆகிய மூன்று நாட்கள் நடைபெற்றது. ஊரக வளர்ச்சித் துறை,தமிழ்நாடு மின்சாரத்துறை,சுகாதாரத்துறை,விவசாயத்துறை,மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர்கள் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர் .பொது மக்களின் மனுக்களுக்கு ஏற்றவாறு பட்டா மாறுதல்,பட்டா பெயர் மாற்றுதல்,நில அளவை மாற்று விவசாயம் ,விவசாயத்தின் மின் இணைப்பு, மின் இணைப்பு பெயர் மாற்றம் உள்ளிட்ட 530 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 51மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டு மனுதாரர்களுக்கு வழங்கப்பட்டது .
தொடர்ந்து நிறைவு நாளான நேற்று பொதுமக்கள் முன்னிலையில் குடிகள்மாநாடு நடைபெற்றது .இதில் பொதுமக்களின் குறை நிறைகளை மாவட்ட வருவாய் அலுவலர் பாலாஜி கேட்டறிந்தார் . தொடர்ந்து தீர்வு காணப்பட்ட பயனாளிகளுக்கு
மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சங்கம் சார்பில் பயனாளர்களுக்கு காது கருவி வழங்கப்பட்டது .
மீதமுள்ள மனுக்கள் பரிசீலனையில் உள்ளன.
நிகழ்ச்சியில் மருங்காபுரி வட்டாட்சியர் மற்றும் வருவாய் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.