மேகதாது அணை விவகாரத்தில் பாரபட்சமாக செயல்படும் மத்திய அரசைக் கண்டித்து காவிரி ஆற்றில் இறங்கி விவசாயிகள் நூதனப் போராட்டம்

0 19
Stalin trichy visit

திருச்சி, ஜூன் 23  மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசு வேடிக்கை பார்ப்பதை கண்டித்து, திருச்சியில் காவிரி ஆற்றில் இறங்கி விவசாயிகள் நூதனப் போராட்டம்.

கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவதைக் கண்டித்தும், அதைத் தடுக்க மத்திய அரசு தயக்கம் காட்டுவதைக் கண்டித்தும், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் காவிரியாற்றில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இதற்குத் தமிழக விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் மத்திய அரசு பாரபட்சமாகச் செயல்படுவதாகவும், கர்நாடகாவின் திட்டத்திற்கு மறைமுகமாக ஆதரவு அளிப்பதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில், மத்திய-மாநில அரசுகளைக் கண்டித்தும், உடனடியாகத் திட்டத்தைத் தடுத்து நிறுத்த வலியுறுத்தியும், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள், திருச்சி மாம்பழச்சாலை பகுதியில் காவிரி ஆற்றில் இறங்கி நூதன போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டத்தின் போது, மத்திய அரசை கண்டித்தும், அணை கட்டுவதைக் கண்டித்தும் விவசாயிகள் கண்டனக் கோஷங்களை எழுப்பினர்.  தொடர்ந்து அடுத்த கட்ட போராட்டங்களும் நடைபெறும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.