வாழ்வாதாரம் பாதிப்பு : மூடப்பட்ட டாஸ்மாக் கடையை திறக்க கோரி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

0 25
Stalin trichy visit

திருச்சி ஜூன் 23 டாஸ்மாக் கடை முடியாதால் வாழ்வாதாரம் போச்சே – திருச்சியில் டாஸ்மாக் கடையை திறக்கச் சொல்லி பொதுமக்கள் தாசில்தார் இடத்தில் மனு அளித்தனர்.

தமிழகம் முழுவதும் 717 கடைகள் மூடப்படும் என தமிழக அரசு அறிவித்து கடைகளும் மூடப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருச்சி கொள்ளிடம் பகுதியில் பார்ருடன் இயங்கி வந்த ஒரு டாஸ்மாக் கடையை உடனடியாக மூட வேண்டும் என வலியுறுத்தி கம்யூனிஸ்ட் கட்சியினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து அந்த கடை கடந்த வாரம் மூடப்பட்டது.

இந்நிலையில்  இன்று மூடிய டாஸ்மாக் கடையை திறக்க வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த 50-க்கு மேற்பட்ட பொதுமக்கள் ஸ்ரீரங்கம் தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோரிக்கை மனு அளித்தனர். அப்போது டாஸ்மாக் கடை மூடப்பட்டதால் தங்களுக்கு வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிட்டது எனவே உடனடியாக அந்த டாஸ்மாக் கடையை அரசு திறக்க வேண்டும் என வலியுறுத்தி தாசில்தார் அலுவலகம் முன்பு கோஷமிட்டனர்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சிந்துஜா என்ற பெண்

அழகிரி புறத்தில் உள்ள டாஸ்மாக் கடை தற்போது மூடப்பட்டுள்ளது. அந்தக் கடை அந்த செயல்பட்டு வருவதால் பலர் அந்த கடையை நம்பி பல்வேறு வியாபாரம் செய்து வருகின்றனர்.
மேலும், அந்த கடை செயல்பட்ட காரணத்தினால் தங்களுக்கு வருமானம் வந்ததாகவும் தெரிவித்தார். மேலும் அந்த கடையில் வரும் எந்த நபரும் பெண்களிடம் தவறான முறையில் பேசுவதில்லை எனவே, அந்த கடை உடனடியாக திறக்கப்பட வேண்டும்.

அருகில் 300மீட்டரிலும், 200 மீட்டரிலும் ஏற்கனவே கடை செயல்பட்டு வருகிறது.
அந்த கடையும் கட்டாயமாக அரசு மூட வேண்டும், பூரண மதுவிலக்கு தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.