மணப்பாறை அருகே கோயில் திருவிழா பிரச்சனை : கிராம மக்கள் சாலை மறியல்

0 29
Stalin trichy visit

திருச்சி, ஜூன் 24  மணப்பாறை அருகே கோவில் திருவிழாவை தனிநபர் நடத்த ஏற்பாடு செய்ததால் மூன்று கிராமங்களைச் சேர்ந்த திடீர் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள ஆணையூரில் ஸ்ரீ குளக்கரை முனியப்பன் கோவிலில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆனையூர், சுண்டக்காம்பட்டி, கருமகவுண்டம்பட்டி ஆகிய மூன்று கிராம பொதுமக்கள் சேர்ந்து திருவிழா நடத்துவது வழக்கம்.

இந்நிலையில் தற்போது தனிநபர் ஒருவர் முனியப்பன் கோவில் தனக்கு சொந்தமான கோவில் என்று கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து திருவிழா நடத்த அனுமதி பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவரது தலைமையில் திருவிழா நடத்த ஏற்பாடு செய்த நிலையில் வழங்கப்பட்ட அனுமதியில் மூன்று கிராம மக்களையும் சேர்த்து திருவிழா நடத்துவதற்குத்தான் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தங்களையும் சேர்த்து திருவிழா நடத்தாமல் தனிநபரும் அவருடன் சிலரும் சேர்ந்து திருவிழா நடத்த ஏற்பாடு செய்வதால் ஆத்திரமடைந்த ஆணையூர், கருமகவுண்டம்பட்டி மற்றும் சுண்டைக்காம்பட்டியைச் சேர்ந்த பொதுமக்கள் சுமார் 200 க்கும் மேற்பட்டோர் ஆணையூர் கே.கே.நகர் என்ற இடத்தில் சாலையின் குறுக்கே மரக்கட்டைகளை போட்டு சாலை மறியல் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த வையம்பட்டி போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பொதுமக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும்போது மறியலில் சிக்கி முன்னாள் நின்ற டிப்பர் லாரியை அதன் ஓட்டுநர் இயக்கியதால் கூட்டத்தில் இருந்த ஒருவர் கல்லால் அடித்ததில் லாரியின் முன்பக்க கண்ணாடி சேதமடைந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்ட நிலையில் பொதுமக்களை சமாதானம் செய்த போலீசார் நாளை மணப்பாறை வட்டாட்சியர் தலைமையில் அமைதி பேசுவதை நடத்துவது என்ன உறுதியளித்ததைத் தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு களைந்து சென்றனர். இதனால் மணப்பாறை – கரூர் சாலையில் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.