மணப்பாறை அருகே பாலக்காட்டாயி அம்மன் கோவில் திருவிழா – கரகம் பாலித்தல் வைபவம்
திருச்சி, ஜூன் 24 திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த முத்தப்புடையான்பட்டியில் எழுந்தருளியுள்ள அருள்மிகு மால்பூண்டி பாலக்காட்டாயி அம்மன் திருக்கோயில் கிராமக் கோவிலாக மட்டுமன்றி எல்லை காவல் தெய்வமாகவும் விளங்குகிறது.
இந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்ட இக்கோவில், திருவிழா நேற்று முன்தினம் காப்பு கட்டுதல் வைபவத்துடன் தொடங்கி திருவிழா நடைபெற்று வந்த நிலையில் முக்கியநிகழ்வான இன்று கரகம்பாலித்தல் வைபவம் நடைபெற்றது.
சக்திகரகத்துடன் பாலக்காட்டாயி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கிராம வீதிகள்தோறும் வலம்வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
அம்மன் திருவீதிஉலா வைபவத்துடன், நூற்றுக்கணக்கான பெண்கள் விவசாயம் செழிக்கவும், மழை பெய்யவும், அம்மன் அருள் வேண்டியும் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்த பக்தர்கள் முளைப்பாரியினை குளத்தில் கரைத்து வழிபட்டனர்.
இதில் பெருந்திரளான பக்தர்களும்,பொதுமக்களும் கலந்து கொண்டு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி சென்றனர்.