பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்யக்கோரி சோபனாபுரம் விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டம்

0 27
Stalin trichy visit

திருச்சி, ஜூன் 25 திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்துள்ள சோபனாபுரம் பேருந்து நிலையம் அருகே, மலைநாடு பழங்குடியினர் மற்றும் மலைவாழ் மக்கள் விவசாயிகள் முன்னேற்ற சங்கம் சார்பில் மாபெரும் கண்டன உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

சோபனாபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் பெற்றுள்ள கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், தொடர்ந்து உயர்ந்து வரும் உர விலையை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்பட்டது.

மேலும், 2026 தேர்தலின்போது சிறு மற்றும் குறு விவசாயிகளின் கூட்டுறவு வங்கி கடன்களை தள்ளுபடி செய்வதாக முதலமைச்சர் ஜோசப் விஜய் அளித்த வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

தமிழ்நாடு விவசாயிகள் போராளி ராமசாமி தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன உண்ணாவிரதப் போராட்டத்தில் முருகேசன் தர்மராஜ் பரமசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர் விடுதலை குமரன் பிரபு ராஜேந்திரன் கிருஷ்ணமூர்த்தி ஜெயராஜ் பங்காரு சாமி செந்தில்குமார் ராமச்சந்திரன் காசிராஜன் ராஜசேகரன் ஆகியோர் சிறப்பு கண்டன உரை ஆற்றினார் மேலும் விவசாயிகள் மற்றும் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் கடன் தள்ளுபடி, உர விலை குறைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு விரைந்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

Leave A Reply

Your email address will not be published.