நீட் தேர்வு குளறுபடி: மத்திய பாஜக அரசைக் கண்டித்து திருச்சியில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

0 34
Stalin trichy visit

திருச்சி, ஜூன் 26 பாசிச பாஜக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நடத்தப்படும் NEET – CBSE – PSCs – VYAPAM – NTA போன்ற தேர்வுகளில், வினாத்தாள் கசிவுகள் – தேர்வு திடீர் ரத்து – பணியாளர் குறைபாடு – வேலைவாய்ப்பின்மை – கல்வி அமைப்பின் தொடர் தோல்விகள் – ஆகியவற்றை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்  மாநகர் மாவட்ட தலைவர்,மாமன்ற உறுப்பினர் எல். ரெக்ஸ்  தலைமையில் தெற்கு மாவட்ட தலைவர் ராஜலிங்கம், வடக்கு மாவட்ட தலைவர் தொட்டியம் சரவணன், மாநகர் மாவட்ட பொருளாளர் முரளி ஆகியோர் முன்னிலையில் தெப்பக்குளம் தபால் அலுவலகம் அருகில் நடைபெற்றது.

நிகழ்வில் கோட்ட தலைவர்கள் மலைக்கோட்டை வெங்கடேஷ் காந்தி, ஸ்ரீரங்கம் கோபி, வரகனேரி இஸ்மாயில், ஜங்ஷன் பிரியங்கா பட்டேல், காட்டூர் ராஜா டேனியல் ராய், அரியமங்கலம் அழகர், ஏர்போர்ட் கனகராஜ், புத்தூர் மலர்வெங்கடேஷ், அணி தலைவர்கள் மகிளா காங்கிரஸ் அஞ்சு, அபிநயா, ஷீலா செளஸ், முன்னாள் ராணுவ பிரிவு ராஜசேகரன், கலைப்பிரிவு அருள், சுப்புராஜ், மனித உரிமை பிரிவு ஆறுமுகம், சக்தி அபியான் மாரீஸ்வரி, ஆர்டிஐ பிரிவு பிரபாகரன், சிறும்பான்மை பிரிவு மொய்தின் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Leave A Reply

Your email address will not be published.