தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு சிறார்கள் இல்லத்தில் தெற்கு மாவட்ட செயலாளர் அன்பில் மகேஸ் காலை உணவு வழங்கினார்

0 14
Stalin trichy visit

திருச்சி, ஜூன் 27 தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு சிறார்கள் இல்லத்தில் தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி  காலை உணவு வழங்கல்.

திருச்சி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட மலைக்கோட்டை பகுதி இளைஞரணி அமைப்பாளர் மாரிக்கண்ணு மற்றும் துணை அமைப்பாளர்களின் ஏற்பாட்டில், திருச்சி கலைஞர் அறிவாலயம் அருகில் உள்ள ‘விடிவெள்ளி’ சிறார்கள் இல்லத்தில் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு.க. ஸ்டாலின்  பிறந்தநாளை முன்னிட்டு, திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. மலைக்கோட்டை பகுதி இளைஞரணி சார்பாக காலை உணவு வழங்கப்பட்டது .இந்த
நிகழ்ச்சியில், திருச்சி தெற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் கலந்துகொண்டு, சிறார்களுக்கு காலை உணவை வழங்கினார்.
இந்த நிகழ்வில், மாநகரக் கழகச் செயலாளர் மு. மதிவாணன், பகுதிச் செயலாளர் மோகன், மாநகர இளைஞரணி அமைப்பாளர் முத்து தீபக், வட்டக் கழகச் செயலாளர் ஜெயச்சந்திரன் மற்றும் கழக இளைஞரணியினர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.