மனவளர்ச்சி குன்றிய சிறுவனை கடத்தியவரை கைது செய்யக்கோரி மறியல்
திருச்சி, ஜூன் 27 திருவெறும்பூர் அருகே மனவளர்ச்சி குன்றிய சிறுவன் காரில் கடத்தல் :
4 மணி நேரத்துக்கு பிறகு விட்டு சென்ற மர்மநபர்கள்
திருவெறும்பூர் அருகே மனவளர்ச்சி குன்றிய சிறுவனை மர்மநபர்கள் காரில் கடத்தி சென்றனர். அதன்பின் 4 மணி நேரத்துக்கு பிறகு மர்மந பர்கள் விட்டு சென்ற னர்.
திருச்சி மாவட்டம் திருவெ றும்பூர் அருகே உள்ள பழங்க னாங்குடி ஊராட்சி பூலாங் குடி காலனியை சேர்ந்த 11 வயது மனவளர்ச்சி குன்றிய சிறுவன் நேற்று முன்தினம் இரவு சிறுநீர் கழிப்பதற்காக வீட்டின் பின்புறம் சென்று ளார்.பின்னர் அவரை காண வில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர்.சிறு வனை அப்பகுதியில் தேடி னர். ஆனால் அவர் கிடைக்க வில்லை. மேலும் உறவினர் கள் வீடுகளில் தேடியும் கண் டுபிடிக்க முடியவில்லை. இதனால் அவர் கடத்தப் பட்டு இருக்கலாம் எனசந்தே கப்பட்டு சிறுவனின் தந்தை நவல்பட்டுபோலீஸ் நிலையத் தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசாரும் அவரை தேடி வந்தனர்.
இந்நிலையில் போலீசில் புகார் கொடுத்துவிட்டு பெற்றோர் வீட்டுக்கு வந்தபோது, சுமார் 4 மணி நேரத்துக்கு பிறகு கருப்புநிற காரில் வந்த மர்மநபர்கள் சிறுவனை வே காரில் இருந்து இறங்கிவிட்டு வேகமாக சென்றனர். சிறு வனை கடத்தி சென்ற மர்ம நபர்கள், அவர் மனநலம்குன் றியவர் என்பதால் அங்கு இறக்கிவிட்டு சென்றதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் நேற்று காலையில் ஒன்று திரண்டு பூலாங்குடி சாலை, | யில் மறியலில் ஈடுபட்டனர். இப்பகுதியில் மின்விளக்கு. கண்காணிப்பு கேமரா வசதி இல்லாததால் அடிக்கடி குற்ற சம்பவங்கள் நடைபெறுகிறது. மேலும் சாலையும் குண்டும்-குழியுமாக உள்ளது என குற்றம்சாட்டினர்.
அப்பகுதி இந்தக்குவரத்து பாதிக்கப் பட்டது. தகவல் அறிந்த திருவெ றும்பூர் துணை போலீஸ் சூப்பி ரண்டு சந்தியா, தாசில்தார் கார்த்திகேயன், வட்டார வளர்ச்சி துணை அலுவலர் அண்ணாதுரை மற்றும் அதிகா ரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடு பட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் அடிப்படை வசதிகள் செய்துதர நடவடிக்கை எடுக்கப்படும். என்று கூறியதை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இந்த போராட்டம் காரண மாக அந்த பகுதியில் சுமார் 6 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.