திருச்சி சந்தானம் வித்யாலயா மேல்நிலைப்பள்ளியில் உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் எழுதிய “லைட்னிங் கிட்” புத்தகம் அறிமுகம்

0 103
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 3  திருச்சி சந்தானம் வித்யாலயா மேல்நிலைப்பள்ளியில் உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் எழுதிய “லைட்னிங் கிட்” புத்தகம் அறிமுகம்

திருச்சி சந்தானம்  வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் ஐந்து முறை உலக செஸ் சாம்பியன் விருது பெற்ற கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் , அவர் எழுதிய “லைட்னிங் கிட்” என்ற புத்தகத்தை அறிமுகப்படுத்தி உரையாற்றினார்.

இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைவர் சந்திரமௌலி மற்றும் செயலர் முனைவர் மீனா ஆகியோர் தலைமை தாங்கினர். பள்ளியின் தலைமை செயல் அதிகாரி சந்திரசேகரன் மற்றும் இயக்குநர் எஸ். அபர்ணா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பள்ளியின் டீன் கணேஷ், அகாடெமி ஹெட் ரவீந்திரநாத் குமார். துணை முதல்வர்கள் ரேகா மற்றும் ஸ்ரீபல்லவி ஆகியோர் கலந்து கொண்டனர்.

பள்ளியின் முதல்வர்  பத்மா சீனிவாசன்  வரவேற்புரை ஆற்றினார். பள்ளியின் டீன் கணேஷ்  நன்றி கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.