சாலையோர உணவு விற்பனையை முறைப்படுத்த பொதுமக்கள் எதிர்பார்ப்பு
திருச்சி, ஜூலை 3 சாலையோர விற்பனையை முறைப்படுத்த உணவுத்தெரு திட்டம்
திருச்சியில் நிறைவேற்ற பொதுமக்கள் எதிர்பார்ப்பு
தமிழகத்தில் சாலையோர உணவு விற்பனையை முறைப்படுத்தவும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பான முறையில் உணவு தயாரிப்பதை உறுதி செய்யும் வகையிலும், சென்னை, திருச்சி, மதுரை, சேலம், கோவை, திருப்பூர் ஆகிய 6 மாவட்டங்களில் ஆரோக்கிய மான சுகாதாரமான உணவுத்தெரு என்ற புதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்று சமீபத்தில் அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.
திருச்சியில் பிரத்யேக உணவுத்தெரு ஒன்றை அமைப்பதற்கு நீண்டகாலமாக முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டு வந்தன. தற்போது தமிழக அரசு ஆரோக்கியமான மற்றும் சுகாதாரமான உணவுத் தெரு திட்டம் அமல்படுத்தப்படும் என்று அறிவித் | துள்ளதால் திருச்சியில் ஏற்கனவே முயற்சித்த திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வர அதிக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
நடைமுறை சிக்கல்கள்
தமிழக அரசு அறிவித்துள்ள ஆரோக்கியமான மற்றும் சுகாதாரமான உணவுத்தெருதிட்டம், பொது மக்களுக்கு குறைந்த விலையில் உணவு வழங்கு வதை உறுதி செய்வதோடு, சாலையோர உணவ கங்களில் விற்கப்படும் உணவின் தரம் மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், உணவு விற் பனை வண்டிகள் ஒரே மாதிரியான வடிவமைப்புடன் இருக்கும். விற்பனையாளர்கள் தலைக்கவசங்கள் மற்றும் கையுறைகளை அணிந்து இருக்க வேண் டும்.
திருச்சியில் உணவுத்தெரு அமைப்பதற்கான முயற்சியின் கீழ் ஏற்கனவே உள்ள சாலையோர உணவகங்கள் மற்றும் தள்ளுவண்டி விற்பனையா ளர்களை ஒருங்கிணைத்து, மத்திய பஸ் நிலையப் பகுதி இதற்கான பொருத்தமான இடமாக அடை யாளம் காணப்பட்டது. பின்னர் சாலையோர உணவு விற்பனையாளர்கள் குறித்த கணக்கெடுப் பும் நடத்தப்பட்டன. தொடர்ந்து, விற்பனையாளர்களுக்கான பயிற்சி மற்றும் நிதி திரட்டும் முயற்சிகள் உள்ளிட்ட ஆரம்பகட்ட நடவடிக்கைகள் மேற்கொள் ளப்பட்டன. ஆனால் இந்த திட்டத்துக்கு பொது இடத்தைப் பயன்படுத்துவதில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக, திட்டம் கைவிடப்பட்டது.
கடந்த 2022-ம் ஆண்டில், திருச்சி மாநகராட்சி தென்னூர் அண்ணாநகர் உழவர்சந்தை அருகே ரூ.2கோடியில் பிரத்யேக உணவுத்தெரு அமைக்க திட்டமிட்டது. இந்த திட்டத்தில் 25 உணவு விற்பனை. நிலையங்கள், அமரும் வசதிகள், போதுமான வாகன நிறுத்துமிடம், குழந்தைகள் விளையாடும் பகுதி மற்றும் சுற்றுச்சுவர் ஆகியவை இடம்பெற இருந்தன. இதற்கான வடிவமைப்பு இறுதி செய் யப்பட்டு, விரிவான திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப் பட்டது. ஆனாலும், நிதி ஒதுக்கீட்டில் ஏற்பட்ட தாமதம் காரணமாக இந்த திட்டத்தில் முன்னேற்றம் ஏற்படவில்லை.
இதனை தொடர்ந்து திருச்சி மாநகராட்சி 2025-26-ம் ஆண்டு பட்ஜெட்டில், நகரில் 5 மண்ட லங்களிலும் மொத்தம் ரூ.5 கோடி செலவில் 5 உணவுத்தெருக்கள் அமைக்கப்படும்.என அறிவித் தது. ஆனால் இந்த திட்டமும் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. தற்போது ஆரோக்கியமான மற்றும் சுகாதாரமான உணவுத்தெருவை உருவாக் குவதில் மாநில அரசு மீண்டும் ஆர்வம் காட்டி வருவதால், திருச்சியில் உணவுத்தெருக்களை அமைக்கும் திட்டம் கைக்கூடி வருகிறது.
இதற்காக பொதுமக்கள் எளிதில் அணுகக்கூடிய வகையிலும், போக்குவரத்துக்கு இடையூறு இல் லாத வகையிலும், சாத்தியமான இடங்களை அதி காரிகள் ஆய்வு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதன் மூலம் திருச்சியில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட இந்த திட்டம் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது.