தொட்டியம் அருகே கல்குவாரியில் முசிறி உதவி ஆட்சியர் அதிரடி ஆய்வு
திருச்சி, ஜூலை 3 தொட்டியம் அருகே கல்குவாரியில் விதிமீறல்கள் நடந்ததா?
முசிறி சப் – கலெக்டர் அதிரடி ஆய்வு
அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு கல்குவாரிகள் செயல்படுகின்றனவா? என் பதை உறுதிப்படுத்த மாவட்ட நிர்வாகம் தீவிர கண்காணிப் பில் ஈடுபட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, முசிறி சப்-கலெக்டர் சுசீரி சுவாங்கி குந் தியா, கிடாரத்தில் உள்ள கல் குவாரிக்கு திடீரென நேரில் சென்று அதிரடி ஆய்வு மேற்கொண்டார்.
கல்குவாரியில் உள்ள ஆவ ணங்களை வாங்கி பார்வை யிட்டார். கல்குவாரிக்கு அனுமதிபெறப்பட்டகாலம் மற்றும் ஆவணங்களின் உண்மைத்தன்மை. சுற்றுச்சூழல் விதிகள் மற்றும் அரசு நிர்ண யித்துள்ள பாதுகாப்பு விதிமு றைகள் முறையாகப் பின்பற் றப்படுகிறதா?, அனுமதிக்கப் பட்ட அளவை விட கூடுதல் கற்கள் வெட்டி எடுக்கப்படுகி றதா?, குவாரியிலிருந்து வெளியேற்றப்படும் சவுடு மணல் எங்கே சேமிக்கப்படுகிறது? என்பது குறித்து விசாரணை நடத்தினார்.
மணல் மற்றும் கற்கள் கடத் தல் புகார்கள் எழுந்து வரும் சூழலில், இந்த ஆய்வு நடத் தப்பட்டுள்ளது. இந்த ஆய் வின் முடிவில் ஏதேனும் விதி மீறல்கள் கண்டறியப்பட் டால், சம்பந்தப்பட்டகுவாரி மீது கடுமையான நடவ டிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரி விக்கப்பட்டது.