திருச்சியில் வீட்டில் பதுக்கிய ரூ.10 லட்சம், 59 செல்போன்கள் பறிமுதல் : 6 பேரிடம் விசாரணை
திருச்சி, ஜூலை 6 திருச்சியில் வீட்டில் பதுக்கிய ரூ.10 லட்சம்-50 செல்போன்கள் பறிமுதல்
6 வாலிபர்களிடம் போலீசார் தீவிர விசாரணை
போதைப்பொருட்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து, தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள். திருச்சி மாநகரில் போலீஸ் கமிஷனர் காமினி உத்தரவின்பேரில் திருச்சி கே.கே.நகர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட சுப்பிரம ணியபுரம் பகுதியில் நேற்று போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். போலீஸ் உதவி கமிஷனர் கென்னடி தலைமையில் நடத்தப்பட்ட இந்த சோதனையின்போது ஒரு வீட்டில் 6 வாலிபர்கள் தங்கி இருந்தனர். சந்தேகம் அடைந்த போலீசார் அந்தவீட்டில் சோதனை பையில் பதுக்கி வைத்திருந்த நடத்தினார்கள். அங்கு ஒரு ரூ.10 லட்சம் மற்றும் 100 ஏ.டி. எம்.கார்டுகள், 50செல்போன் கள் மற்றும் அதற்குண்டான சிம்கார்டுகள் ஆகியவை இருந் தன. பின்னர் அந்தவாலிபர்க ளிடம் விசாரித்தனர். அப் போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாகபதில்கூறினர். இதையடுத்து பணம் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்து 6 வாலிபர்களையும் கே.கே.நகர் போலீஸ் நிலை யத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் அவர்களிடம் இருந்து 3 மோட்டார் சைக்கிள்கள், ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டது.
இதில் அவர்கள், ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதும், இவர்கள் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருவதாகவும், அதற்காக தான் பணம் வைத்து இருந்ததாக வும் போலீசாரிடம் தெரிவித்தனர். ஆனால் வெவ்வேறு வங்கி கணக்குகளில் வர்த்த கத்தில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த வாலி பர்கள் கூறுவது உண்மை தானா?அல்லது அந்த பணம் ஹவாலாபணமா?. முறைகே டான வழியில் சேகரித்த பணத்தை வைத்துள்ளார் களா? என்பது குறித்து போலீ சார்தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.