மணப்பாறை அருகே 50 அடி கிணற்றில் தவறி விழுந்த ஆண் மயில்: பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினர்

0 135
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 6 மணப்பாறை அருகே 50 அடி கிணற்றில் தவறி விழுந்த ஆண் மயில்
தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த நரியம்பட்டியில் உள்ள சுமார் 50 அடி ஆழமுள்ள பொது கிணற்றில் ஆண் மயில் ஒன்று தவறி விழுந்த நிலையில் இதுபற்றி அந்த பகுதியைச் சேர்ந்த சங்கீதா என்ற பெண் அளித்த தகவலின் பேரில் தீயணைப்பு துறையினர், போலீசார் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மயிலை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பயன்பாடு இல்லாத கிணறு என்பதால் தீயணைப்பு துறையினர் உரிய பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்தி கிணற்றில் இறங்கி ஆண் மயிலை பத்திரமாக மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

பின்னர் மயில் மணப்பாறை வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு கால்நடை மருத்துவர் சிகிச்சை அளிக்கப்பட்ட பின்பு தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வருகின்றது.

Leave A Reply

Your email address will not be published.