பெண்களுக்கான விழிப்புணர்வு மாரத்தான் போட்டி : மாவட்ட ஆட்சியர் தகவல்

0 24
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 6  பெண்களுக்கான விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெறவுள்ளது. மாவட்ட  மாவட்ட ஆட்சியர்பிரத்திக் தாயள்  தகவல்.

“பெண்குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டம்’ (BBBP) பெண் குழந்தைகளின் பாலின சமநிலையை மேம்படுத்திடவும் பெண் குழந்தைகள் கல்வி கற்பதை உறுதி செய்யும் திட்டத்தினை செயல்படுத்தும் பொருட்டு பெண்களுக்கான விழிப்புணர்வு மாரத்தான் போட்டி பெண்களுக்கு மட்டும் 11.07.2026 அன்று காலை 6.30 மணியளவில் அண்ணா விளையாட்டரங்கம் சுற்றுப்பாதையில் நடைபெறவுள்ளது.

மேலும் மாரத்தான் போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் T-Shirt மற்றும் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது. மாரத்தான் போட்டியில் கலந்து கொள்வதற்கு   அண்ணாவிளையாட்டரங்கில் 11.07.2026 அன்று காலை 6.00 மணியளவில் நேரடியாக பதிவுகள் மேற்கொள்ளலாம்.

மாரத்தான் போட்டியில் வெற்றிபெறுபவர்களுக்கு பரிசுத்தொகை ரொக்கமாக பின்வருமாறு வழங்கப்படவுள்ளது. முதல் பரிசு ரூ.5000/-, இரண்டாம் பரிசு ரூ.3000/-, மூன்றாம் பரிசு ரூ.2000/- மற்றும் 4 முதல் 10 இடங்கள் பெறும் 7 நபர்களுக்கு மட்டும் ஆறுதல் பரிசு தலா ரூ.1000/- வீதமும் வழங்கப்படவுள்ளது.

மேலும் விபரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், அண்ணா விளையாட்டரங்கம், திருச்சிராப்பள்ளி. தொலைபேசி எண். 0431-2420685 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என  மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.