திருச்சி கே.கே.நகரில் அரசுப் பேருந்து ஓட்டுநர் மீது தாக்குதல்
திருச்சி, ஜூலை 11 திருச்சி கே.கே.நகர் பஸ் நிறுத்தத்தில் அரசு பஸ் டிரைவர் மீது தாக்குதல்; வீடியோ வைரல்
திருச்சி கே.கே. நகர் பஸ் நிறுத்தத்தில் அரசு பஸ் டிரைவரை, 2பேர் தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அரசு பஸ் டிரைவரான சிவக் குமார் என்பவர், நேற்று காலை வழக்கம்போல் பஸ்சை கே.கே. நகர் பஸ் நிறுத்தம் நோக்கி ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது பஸ் நிறுத்தத்தில், தனியார் நிறுவனத்தின் பஸ் ஒன்று நிறுத்தப்பட்டிருந்து. அப்போது சிவக்குமார், அந்த தனியார் நிறுவன பஸ் டிரைவரிடம், பஸ்சை சற்று ஓரமாக நிறுத்துமாறு கூறியுள்ளார்.
இதனால் தனியார் நிறுவன பஸ் டிரைவருக்கும், சிவக்குமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த தனியார் நிறுவன பஸ் டிரைவர் மற்றும் அவரது மகன் இருவரும் சேர்ந்து சிவக்குமாரை தகாத வார்த்தைகளால், திட்டி தாக்கி, கொலை மிரட் டல் விடுத்துள்ளனர். இதைத் தடுக்க வந்த மற்ற பஸ் டிரை வர்களையும் மிரட்டி உள்ளனர்.
இதுகுறித்து சிவக்குமார் கே. கே. நகர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் “அந்த தனியார் பஸ் டிரைவர் மற்றும் அவரது மகன் ஆகிய 2 ‘பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்ற னர். இதேபோல் திருச்சியின் பல்வேறு பகுதிகளிலும் தனியார் “நிறுவன பஸ்கள் சாலையிலேயே நிறுத்தப்படுகின்றன. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதோடு, விபத்து சம்பவங்களும் நடைபெறுகின்றன.எனவே இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தனியார் நிறுவன பஸ்களை ஒழுங்கப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.