துறையூர்- திருச்சி நெடுஞ்சாலையில் குவிந்து கிடக்கும் மணலை அகற்ற கோரிக்கை
திருச்சி, ஜூலை 11 துறையூர்-திருச்சி நெடுஞ்சாலையில் குவிந்து கிடக்கும் மணல் மணலை அகற்ற வாகன ஓட்டிகள் கோரிக்கை
துறையூரில் உள்ள திருச்சி செல்லும் நெடுஞ்சாலை மாநில நெடுஞ்சாலை கட்டுப் பாட்டின் கீழ் வருவதோடு, துறையூர் நகராட்சி கட்டுப் பாட்டிலும் வருகிறது. இந்நி லையில் துறையூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பலத்த காற்று வீசி வருகிறது. இதனால் சாலையோரங் களில் மணல் குவியலாக காணப்படுகிறது.
சாலையில் குவியும் மணலை ஒவ்வொருவாரமும் அல்லது மாதத்திற்கு ஒரு முறையாவது சாலை பணியா ளர்கள் சுத்தம் செய்வது வழக் கம். ஆனால் தற்போது பல மாதங்களாக மணல் குவியல் அகற்றப்படவில்லை. இத னால் திருச்சியில் இருந்துதுறையூர் வரும் வாகன ஓட் டிகளும், துறையூரில் இருந்து வெளியூர் செல்லும் வாகன ஓட்டிகளும் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
பலத்த காற்று வீசும்போது, மணல் பறந்து இருசக்கர வாகன ஓட்டிகளின் கண்கள் மீது விழுவதால், அவர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்கும் நிலையும் உள்ளது. அதுமட்டுமின்றி குப் பைகளும் சாலையோரங் களில் குவிந்து கிடக்கிறது. எனவே சம்பந்தப்பட்டவர் கள் மணல் குவியல் மற்றும் குப்பைகளை அகற்ற நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.