ராம்ஜிநகர் அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு: மர்ம நபர் 2ஆவது முறையாக கைவரிசை

0 19
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 13 கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு 2-வது முறையாக கைவரிசை காட்டியவருக்கு வலைவீச்சு
திருச்சி ராம்ஜிநகர் அருகே உள்ள எசனைபட்டி கிராமத்தில் சுயம்பு செல்லாயி அம்மன் கோவில் உள்ளது. நேற்று முன்தி னம் காலை இக்கோவிலின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு, திறந்து கிடந்தது. இதை அவ்வழியாக சென்றவர்கள் கண்டு அதிர்ச்சி அடைந்து, ஊரில் உள்ள முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து கிராம மக்கள் கோவிலின் உள்ளே சென்று பார்த்தபோது உண்டியல் உடைக்கப்பட்டு, அதில் இருந்த பணம், சில்லறை காசுகள் திருட்டுபோயிருந்தது தெரியவந்தது. ஏற்கனவே இந்த கோவி லில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் புகுந்த மர்ம நபர் உண்டி யலை பெயர்த்து எடுத்து, சுமார் அரை கிலோமீட்டர் தூரம் தூக்கிச்சென்று அதில் உள்ள பணம் கொள்ளை அடிக்கப் பட்டது. இதனையடுத்து இக்கோவிலுக்கு கண்காணிப்பு கேமராகிராமத்தின் சார்பாகபொருத்தப்பட்டது. தற்போதும் கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருட்டுபோன தால்,உடனடியாக கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது அதிர்ச்சியடைந்தனர். ஏனெனில் கடந்த ஆண்டு திருட்டு வழக்கில் கைதான அதே நபர்தான், தற்போ தும் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இது குறித்து தகவல் அறிந்த ராம்ஜிநகர் போலீசார் சம்பவ இடத்தை பார்வை யிட்டனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.