இனாம்குளத்தூர் அருகே வீட்டின் கதவை உடைத்து 7 பவுன் நகை-பணம் திருட்டு
திருச்சி, ஜூலை 13 இனாம்குளத்தூர் அருகே வீட்டின் கதவை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
திருச்சி இனாம்குளத்தூர் அருகே உள்ள இனாமாத்தூர் நாயக்கர் தெருவை சேர்ந்தவர் அஞ்சலை (வயது 37). இவர் தனது கணவர் மற்றும் மகனு டன் கோவையில் வசித்து வருகிறார். இந்நிலையில் தனது சொந்த ஊரான இனாமாத்தூரில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு திரு விழா நடைபெற்ற தால், குடும்பத்துடன் அங்குள்ள – விட்டு மீண் டும் கோவை சென்றுள்ள னர்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவரது உறவினர் ஒருவருக்கு விபத்து ஏற்பட்டது. அவரை பார்ப்பதற்காக அஞ் சலை இனாமாத்தூருக்கு வந்தார். அங்கு அவர் தனது வீட்டிற்கு வந்த போது, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு பீரோ வில் இருந்த பொருட்கள் கலைந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
மேலும் பீரோவில் இருந்த 7 பவுன் நகைகள் மற்றும் ரூ.5 ஆயிரம், வெள்ளி அரை ஞாண் கொடி ஆகியவை திருடு போயிருந்தது தெரிய வந்தது. இது குறித்து அவர் ராம்ஜிநகர் போலீஸ் நிலையத் தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்ப திவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.