சமயபுரம் பகுதியில் தங்கும் விடுதிகளில் போலீசார் திடீர் சோதனை

0 20
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 13  சமயபுரம் பகுதியில் தங்கும் விடுதிகளில் போலீசார் திடீர் சோதனை
போதைப்பொருட்கள் பயன்பாட்டை தடுக்க அதிரடி

திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சமயபுரம் மற்றும் சுற்றுவட் டார பகுதிகளில் போதைப் பொருள் அதிக அளவில் நட மாட்டம் உள்ளதாக திருச்சி மாவட்ட போலீஸ் நிர்வாகத் திற்கு தொடர்ந்து தகவல்கள் கிடைத்தவண்ணம் இருந்தன. மேலும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் பொது | மக்கள் என பலதரப்பட்ட மக்களும் பாதிப்படைந்து வருகின்றனர்.

போதைப் பொருட்களை பயன்படுத்திவிட்டு வாகனங்களில் செல்வோர் எண்ணிக் கையும் சமீப காலமாக அதிக ரித்து வருகிறது. இதன் காரண மாக அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு, உயிரிழப்பும் ஏற்படு கிறது. போதைப்பொருட்கள் விற்பனை, நடமாட்டத்தை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

மாவட்ட / போலீஸ் சூப்பி ரண்டு அறிவுறுத்தலின்படி லால்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜ்மோகன், ஜீயபுரம்துணை சூப்பிரண்டு கதிரவன் ஆகியோர் தலைமை யில்சமயபுரம் இன்ஸ்பெக்டர் குணசேகரன், கொள்ளிடம் நம்பர் ஒன் டோல்கேட் இன்ஸ்பெக்டர் வீரபாண்டி யன், சப்-இன்ஸ்பெக்டர் மற் றும் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த நூற்றுக்கும்மேற்பட்ட /போலீசார் 10 குழுக்களாக நேற்று சமயபுரம் பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளின் பின்புறம் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகள், மாணவர் கள் மற்றும் வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் தங்கி உள்ள 10-க்கும் மேற் பட்ட தனியார் தங்கும் விடுதிகளில் திடீரென புகுந்து சோதனையில் ஈடுபட்டனர்.

மேலும் அங்கிருந்தவர்கள் போதை பொருட்களை பயன்படுத்தி உள்ளனரா? என்றும், போதைப் பொருட் கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என்றும் அதிரடியாக சோதனை செய்தனர். தொடர்ந்து போதைப் பொருட்கள் பயன்படுத்துப் வர்களை கண்டறிந்து, அதன்’ தீமைகள் குறித்து எடுத்து ரைத்து, அவர்களிடம் போலீ சார்விழிப்புணர்வை ஏற்படுத் தினர். ஒரே நேரத்தில் நூற்றுக் கும் மேற்பட்ட போலீசார் சோதனையில் ஈடுபட்டது சமயபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave A Reply

Your email address will not be published.