திருச்சி-சிங்கப்பூர் விமான சேவையை 5.83 லட்சம் பயணிகள் பயன்படுத்தி சாதனை

0 13
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 13  கடந்த நிதியாண்டில் திருச்சி-சிங்கப்பூர் விமான சேவையை 5.83 லட்சம் பயணிகள் பயன்படுத்தி சாதனை

திருச்சியில் இருந்து அதிக அளவிலான விமானங்கள் சிங்கப் பூர், மலேசியா,துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட ஈரான்-அமெரிக்க போரின் காரணமாக துபாய் மற்றும் வளைகுடா நாடுகளுக்கு இயக்கப்பட்ட விமானங்க ளின் சேவை குறைக்கப்பட்டது. ஆனால் திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்குஇயக்கப்பட்ட விமான சேவைகளை தொடர்ந்து பயணிகள் பயன்படுத்தி வந்ததாலும், விமான நிறுவனங்கள் தனது விமான சேவைகளை அதிகரித்து வழங்கியதாலும், கடந்த 2025-26 நிதியாண்டில் தமிழ்நாடு-சிங்கப்பூர் இடையே மொத்தம் 17 லட்சத்து 44 ஆயிரத்து 306 பயணிகள் விமானத் தில் பயணம் செய்துள்ளனர்.

இதில், திருச்சி – சிங்கப்பூர் விமான சேவையை மட்டும் 5 லட்சத்து 83 ஆயிரத்து 758 பயணிகள் பயன்படுத்தியுள்ளனர். இதன்மூலம், கடந்த நிதி யாண்டுடன் ஒப்பிடுகையில் இந்த வழித்தடத்தில் பயணிக ளின் எண்ணிக்கை 2.36 சதவீதம் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது திருச்சி விமான நிலைய வரலாற்றில் புதிய சாதனையாக கருதப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.