திருச்சி மாநகராட்சி 1 முதல் 7 வார்டுகளுக்கு ஒருமுறை மட்டும் குடிநீர் விநியோகம்: மாநகராட்சி ஆணையர் தகவல்

0 112
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 18  திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட ஆளவந்தான் படித்துறை நீரேற்று நிலையத்திலிருந்து வார்டு எண்: 1 முதல் 7 வரை பகுதிகளுக்கு குடிநீரானது காலை 5.00 மணி முதல் 8.30 மணி வரையிலும் மற்றும் மாலை 5.00 மணி முதல் 6.00 மணி வரையிலும் இருவேளை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது கொள்ளிடம் ஆற்றில் நீர்மட்டம் குறைந்துள்ளதால், நீரேற்று நிலையத்திலிருந்து குடிநீரானது மேற்கண்ட வார்டுகளுக்கு தொடர்ந்து இருவேளை வழங்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஆகையால் தற்காலிகமாக ஏற்பட்டுள்ள குடிநீர் பற்றாக்குறையை சீர்செய்யும் வரை, வார்டு எண்: 1 முதல் 7 வரை பகுதிகளுக்கு குடிநீரானது காலை 5.00 மணி முதல் 8.00 மணி வரை ஒருவேளை மட்டும் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்படும் என இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. இதனால் ஏற்படும் சிரமத்தைப் பொறுத்து மாநகராட்சியுடன் ஒத்துழைக்குமாறும், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும், திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையர்  கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.