இளநிலை உதவியாளர் – உதவியாளர் முன்னேற்ற சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம்
திருச்சி ஜூலை 25
தொகுப்பு புதிய காலத்தை நிரந்தரப் பணிக்காலமாக சேர்த்து ஓய்வூதியம் வழங்க வேண்டும் – இளநிலை உதவியாளர் மற்றும் உதவியாளர் முன்னேற்ற சங்க மாநிலத் தலைவர் கோரிக்கை ..
தமிழ்நாடு அரசு 2003 ஆம் ஆண்டு இளநிலை உதவியாளர் மற்றும் உதவியாளர் முன்னேற்ற சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாநிலத் தலைவர் பார்த்தசாரை தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் பச்சையப்பன் அபிமன்யு கிருஷ்ணமூர்த்தி சுரேஷ் நாராயணன் மணிவண்ணன் விஸ்வநாதன் உட்பட மாநில மாவட்ட நிர்வாகிகள் ஏராளமான பங்கேற்றனர்.
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மாநில தலைவர் பார்த்தசாரதி …….
அரசு ஊழியர் ஓய்வூதியம் பெற வேண்டுமானால் பத்து வருடம் பூர்த்தியாகி இருக்க வேண்டும். ஆனால் இதில் 40% பேர் 45வயதில் வேலைக்கு சேர்ந்தனர் அவர்களுக்கு ஏழு வருட காலம் தொகுப்பூதியத்தில் போய்விட்டது அவர்கள் 52வயதில் நிரந்தரமாக்கப்படுகின்றனர். சிலர் 58 வயதில் பணி நிரந்தரமாகின்றனர்.
என இவற்றை கணக்கிடும் பொழுது அவர்களுக்கு ஆறு அல்லது எட்டு வருடத்திற்குள்ளாக கணக்கிடப்படுகிறது. எனவே, அவர்கள் தொகுப்பு ஊதியத்தில் பணிபுரிந்த ஆண்டை பணிக்காலமாக அறிவித்து அவர்களை ஓய்வூதியப் பட்டியலில் சேர்த்து
அவர்களுக்கும்
ஓய்வூதியத்தை வழங்கிட வேண்டும்,
பணிக்காலத்தில் குடும்ப நல மருத்துவ காப்பீட்டுதற்கான தொகை பிடிக்கப்பட்டது. இந்த மருத்துவ காப்பீடு திட்டத்தில் பயன்பெற்றோர் சிலர் மட்டுமே. ஓய்வு பெற்றோர் அவர்கள் ஓய்வு பெற்ற நாளில் இருந்து மருத்துவ காப்பீடு திட்டம் அவர்களுக்கு நிறுத்தப்படுகிறது.
எனவே, ஓய்வு பெற்றோர் வயது முதிர் காரணமாக மருத்துவ சிகிச்சை பெற வழியின்றி நோயாளியாக பாதிக்கப்படும் அவர்களுக்கு இந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியருக்கான மருத்துவ காப்பீடு திட்டத்தை நடைமுறை
ப்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.