உள்ளாட்சித் தேர்தல், நாடாளுமன்ற தேர்தலிலும் த.வெ.க.வுடன் கூட்டணி : காதர்மொகிதீன் பேட்டி

0 15
Stalin trichy visit

திருச்சி ஜூலை 25 இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திருச்சி தெற்கு வடக்கு மாவட்ட பொது குழு மற்றும் திருச்சி மண்டல பெரம்பலூர் கள்ளக்குறிச்சி விழுப்புரம் கரூர் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருச்சி பாலக்கரை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருச்சி மாவட்ட தலைவர் சபித் ரகுமான் தலைமையில் நடைபெற்றது

இந்நிகழ்வில் தேசிய தலைவர் காதர்மொய்தீன் தமிழக சிறுபான்மைத்துறை அமைச்சர் ஷாஜகான் ஆகிய கலந்து கொண்டனர்.

கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தேசிய தலைவர் காதர் மொய்தீன் .

பொதுக் குழுவில் எடுத்த முடிவின்படி தமிழ்நாட்டை 6 மண்டலமாக பிரித்து இருக்கிறோம்.

தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தில் ஆட்சிக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கு வரவேற்று இந்த ஆட்சியில் பங்கு ஏற்று நல்லாட்சி தமிழகத்தில் நடத்திக் கொண்டிருக்கிறது.

இந்த ஆட்சி மாற்றத்திற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஏன் ஆதரவு கொடுத்தது.

இந்த ஆதரவு தொடர்ந்து உள்ளாட்சி, சட்டமன்ற, மற்றும் பாராளுமன்ற தேர்தலிலும் தொடர்ந்து பயணிக்கும்.

உள்ளாட்சி தேர்தலில் எந்தெந்த இடங்களில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வெற்றி பெறும் என்பதை தமிழக வெற்றி கழகத்துடன் தொடர்பு கொண்டு அவர்கள் ஆலோசனை மேற்கொண்டு இடங்களைப் பெற்று போட்டியிட உள்ளோம்.

6மாவட்டங்களில் உள்ளாட்சிகளில் வாய்ப்பு இடங்கள் உள்ளது என்பதை முடிவு செய்துள்ளோம். மாநகராட்சி, நகராட்சிகளும் எந்தெந்த வார்டுகளில் இருக்கக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது என்பதையும் இந்த கூட்டத்திலே அலசி ஆராயப்பட்டுள்ளது.

நீட் தேர்வை எதிர்த்து தமிழகம், இந்தியா முழுவதிலும் எதிர்த்து இருக்கிறது.

காக்ரோச் ஜனதா பார்ட்டியின் இந்த முடிவு டெல்லியை குலுக்கிவிட்டது.
அவர்கள் எடுத்த முடிவுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும், மாணவர் இயக்கங்களும், மக்களின் ஆதரவளிக்கும் நிலை வந்து விட்டது.
எனவே, நீட் தேர்வை அறவே இல்லாமல், தமிழ்நாட்டில் மட்டுமல்ல ஒவ்வொரு மாநிலத்திற்கும் அந்த தேர்வை மாநில கல்வி பட்டியலுக்கு சேர்க்க வேண்டும். அப்போதுதான் முடிவு வரும் என நாங்களும் கூறி வருகிறோம். இதைத்தான் தமிழக அரசும் கூறி வருகிறது.

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அருமையான முடிவு எடுத்து கர்நாடக முதல்வரை சந்திக்க உள்ளார்.
இரண்டு மாநில முதல்வரும் சந்தித்து பேசி மேகதாது தமிழகத்திற்கும் என்ன சாதக பாதகம் என்று பேசி ஒரு நல்ல முடிவு எடுக்க வேண்டும்.

முதல்வர் கர்நாடகாவிற்கு போவது பாதகம் வராது, சாதகம் வரும் என்று நம்புகிறோம்.

படம் பார்த்து விட்டு அமைச்சர் பர்வேஸ் கண்ணீர் விடுகிறாரே என்ற கேள்விக்கு

படம் பார்க்கும்போது சில காட்சிகளில் எமோஷன் வரும் போது கண்ணீர் வரும், டிவியில் பார்க்கும்போது கண்ணீர் வருகிறது.அதனை பத்திரிக்கையில் போட்டு எதற்கு பெரிது படுத்த வேண்டும்.

காக்ரோச் ஜனதா பார்ட்டி கோரிக்கை வெற்றி பெற்றுள்ளது. மத்திய கல்வி அமைச்சர் பதவி விலகி உள்ளார்.
முதல் வெற்றி இரண்டாவது வெற்றி நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும்.
மத்திய கல்வி பாடத்திட்டத்தில் இருந்து
மாநில பாடத்திட்டத்திற்கு அது மாற்றப்பட வேண்டும் அது முழு வெற்றி பெறும் என தெரிவித்தார்

Leave A Reply

Your email address will not be published.