கருமண்டபம் JRS நகர் பகுதியில் 80வது சுதந்திர தின விழா

0 16
Stalin trichy visit

திருச்சி, ஆக. 15  கருமண்டபம் JRS நகர் பகுதியில் 80வது சுதந்திர தின விழா சிறப்பாக நடைபெற்றது

திருச்சி கருமண்டபம் பகுதியில் உள்ள வசந்த நகர், வ.உ.சி. நகர், காவேரி நகர், ஜேபி நகர் மற்றும் JRS நகர் குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில் 80வது இந்திய சுதந்திர தின விழா,  காலை 8.00 மணியளவில் JRS நகர் பகுதியில் சிறப்பாக நடைபெற்றது.

விழாவிற்கு சங்க நிறுவனர் தலைவர்  P. அந்தோணிசாமி,  தலைமை தாங்கினார். துணைச் செயலாளர் A. தக்ஷணாமூர்த்தி வரவேற்புரை வழங்கினார்.

JRS நகர் பகுதியைச் சேர்ந்த  C. மாரிமுத்து, ஓய்வு சத்துணவு அமைப்பாளர்  தேசியக் கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார்.

திருச்சிராப்பள்ளி கருமண்டபம் கவிஞர்  முஹம்மது அலி  சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்து வாழ்த்துரையாற்றினார்.

விழாவில் நலச்சங்கச் செயலாளர்  M.A. அக்பர் ஹுசைன், துணைச் செயலாளர் J. ஜான்பிரகாஷ் எபினேசன்,மற்றும் துணைச் செயலாளர் B. கார்த்திகேயன்,  உள்ளிட்ட நிர்வாகிகள் தங்களது உரையில், குடியிருப்போர் நலச் சங்கம் கடந்து வந்த பாதை, இதுவரை மேற்கொண்ட சமூகநலப் பணிகள், சங்கத்தின் எதிர்கால செயல்பாடுகள், குடியிருப்போரின் நலன் சார்ந்த கோரிக்கைகள் பற்றியும் நலச்சங்கம் தொடங்கிய நாள் முதல் இன்று வரை சுதந்திர தினம் மற்றும் குடியரசு தின விழாக்கள் மதநல்லிணக்கத்துடனும் ஒற்றுமையுடனும் சிறப்பாக நடைபெற்று வருவது குறித்தும், மேலும் சமீபத்தில் நடைபெற்ற நலச்சங்க பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தனர்

விழாவில் சங்கப் பொறுப்பாளர்கள், நிர்வாகிகள், உறுப்பினர்கள், குடியிருப்போர், மகளிர், சிறார்கள் மற்றும் குறிப்பாக, இப்பகுதியில் புதிதாக சங்கத்தில் இணைந்த உறுப்பினர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.

J.R.S. நகர் ஜோஷ்வா கமல்நாதன் மற்றும் M. ரவிக்குமார் குடும்பத்தினரின் ஏற்பாட்டில், விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் சிறப்பான சிற்றுண்டியும் இனிப்பும் வழங்கப்பட்டது.

நலச்சங்கச் செயலாளர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, குழுவினர் அனைவரது ஒத்துழைப்புடன் விழாவிற்கான ஏற்பாடுகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டன.

நிறைவாக  நலச்சங்க பொருளாளர்  A. சகாயராஜா நன்றி  கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.