தலைமை தேர்தல் ஆணையரைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
திருச்சி, செப். 29 திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் இந்திய தேர்தல் ஆணையத்தில் நடைபெறும் குழப்பங்களுக்கு காரணமாக உள்ள பாசிச பாஜக அரசின் கைக்கூலியாக செயல்படும் இந்திய தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தேசத்துரோகம் செய்துள்ளார்.
அவரை உடனடியாக பதவிவிலகி அப்ரூவராக (அரசுத் தரப்பு சாட்சியாக) மாற வேண்டும் எனவும், வாக்குத் திருட்டுச் சதியில் நரேந்திர மோடி மற்றும் அமித்ஷா ஆகியோர் குற்றம் செய்துள்ளனர் என்பதை சுட்டிகாட்டியும் திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்- மாமன்ற உறுப்பினர் எல். ரெக்ஸ் அவர்களின் தலைமையில் திருச்சி பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் சு.திருநாவுக்கரசர் கண்டன உரையாற்றினார்.
தெற்கு மாவட்ட தலைவர் ராஜலிங்கம், வடக்கு மாவட்ட தலைவர் தொட்டியம் சரவணன் ஆகியோர் முன்னிலை வகுத்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட பொறுப்பாளர்கள் திரவியம், இலபாஸ்கர், சிவ சுப்பிரமணியம், முன்னாள் மாவட்ட தலைவர் ஜெரோம் ஆரோக்கியராஜ் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். நிகழ்வில் மாவட்ட பொருளாளர் முரளி, மாமன்ற உறுப்பினர் சோபியா விமலா ராணி, மாநில நிர்வாகிகள் சிறும்பான்மை பிரிவு மாநில துணைத்தலைவர் பேட்ரிக் ராஜ்குமார், முன்னாள் ராணுவ பிரிவு ராஜசேகர், ஆராய்ச்சி பிரிவு மாநில துணைத்தலைவர் பாண்டியன், கலைப்பிரிவு மாநில துணைத்தலைவர் அருள், மாவட்ட நிர்வாகிகள் ஷேக் தாவுத், சத்தியநாதன், விமல், அசோகன், பூக்கடை பண்ணீர்,
செந்தமிழ் செல்வன், ராஜா, சக்கரபாணி, விமல், கோட்டதலைவர்கள் ஜங்ஷன் பிரியங்கா பட்டேல், மலைக்கோட்டை வெங்கடேஷ் காந்தி, காட்டூர் ராஜா டேனியல் ராய், அரியமங்கலம் அழகர், தில்லைநகர் கிருஷ்ணா, மார்க்கெட் பகதுர்ஷா, ஏர்போர்ட் கனகராஜ், சுப்ரமணியப்புறம் எட்வின், சிவாஜி சண்முகம், ராஜேஷ்வரி, குத்தூஸ், சிக்கல் சண்முகம், விக்டர், சம்சுதின், அணி தலைவர்கள் மீனவர் அணி தனபால், மகிளா காங்கிரஸ் ஷீலா செளஸ், அஞ்சு, கவிதா நாச்சியார், கோகிலா, வழக்கறிஞர் பிரிவு விக்னேஷ், ஐடி பிரிவு கிளமென்ட், ஆர்டிஐ பிரிவு பிரபாகரன், மனித உரிமை பிரிவு ஆறுமுகம், கலைப்பிரிவு சுப்புராஜ், இலக்கிய அணி பத்பநாபன், வார்டு நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் திரளாக கலந்துகொண்டனர்.