மாணவிக்கு பாலியல் தொந்தரவு; வாலிபர் மீது போக்சோ வழக்கு

0 21
Stalin trichy visit

திருச்சி, ஆக.17 திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே அருகேஉள்ள உள்ள ராசாம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 31). இவர், 16 வயதுடைய பிளஸ்-2 மாணவியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்களின் காதல் விவகாரம் சிறுமியின் பெற்றோருக்கு தெரியவந்ததால், மாணவியை கண்டித்தனர். இதையடுத்து திருவிழாவிற்கு வந்தபோது மாணவி தனியாக இருப்பதை அறிந்த பாலசுப்ரமணியன், அவருக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு செய்துள்ளார். இது குறித்து மாணவியின் தாய் ஜீயபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் பால சுப்பிரமணியன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.