திருச்சியில் மாநில அளவிலான சிலம்பம் போட்டி: முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்

0 27
Stalin trichy visit

திருச்சி, ஆக.17  ஸ்ரீ செங்குலத்தான் குழந்தலாயி அம்மன் அகுமரேசன் சிலம்பம் தற்காப்பு கலைக்கூடம் சார்பில் 6வது மாநில அளவிலான சிலம்பம் போட்டி திருச்சியில் நடைபெற்றது:-

இந்திய திருநாட்டின் 80ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு இளைய தலைமுறையினரிடம் போதை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஸ்ரீ செங்குலத்தான் குழந்தலாயி அம்மன் அகுமரேசன் சிலம்பம் தற்காப்பு கலைக்கூடம் நடத்தும் 6வது மாநில அளவிலான சிலம்பப் போட்டி திருச்சி உறையூர் சேஷ ஐய்யங்கார் நினைவு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நேற்று  நடைபெற்றது.

இந்த போட்டியினை ஸ்ரீ செங்குளத்தான் குழந்தலாயி அம்மன்சிலம்பம் தற்காப்பு கலைக்கூடம் நிறுவனர் சிலம்ப ஆசான் குமரேசன் தலைமை தாங்கினார் . இந்த போட்டியினை முன்னாள் அமைச்சரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமான கே என் நேரு சிலம்பப் போட்டியை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்வில் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மேயர் அன்பழகன், எழில்மாறன் செல்வேந்திரன் – கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாநில துணைச் செயலாளர் மற்றும் புதுக்கோட்டை ஆலங்குடி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மேலும், சிறப்பு விருந்தினர்கள், முக்கிய பிரமுகர்கள், சிலம்ப ஆசான்கள், பயிற்சியாளர்கள், பெற்றோர்கள் மற்றும் சிலம்ப ஆர்வலர்கள் கலந்து கொண்டு போட்டியாளர்களை உற்சாகப்படுத்தினர்.

தமிழர்களின் பாரம்பரிய தற்காப்புக் கலையான சிலம்பத்தின் சிறப்பை உலகறியச் செய்வதுடன், இளம் தலைமுறையினரிடையே சிலம்பக் கலையின் மீதான ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கிலும் இப்போட்டி நடத்தப்பட்டது.

தென்காசி, மதுரை, சேலம், திருச்சி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட சிலம்பப் பயிற்சி பெற்ற மாணவ, மாணவிகள் மற்றும் வீரர்கள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் சிலம்ப ஆசான் அ. குமரேசன், நிறுவனர் மற்றும் தலைமைப் பயிற்சியாளர், ஸ்ரீ செங்குளத்தான் குழந்தலாயி அம்மன் அ.குமரேசன் சிலம்பம் தற்காப்பு கலைக்கூடம் மற்றும் குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.