திருச்சி மாவட்ட ஆட்சியரகத்திற்கு காய்ந்த வாழைக்கன்றுடன் திரண்டு வந்த விவசாயிகள்
திருச்சி, ஆக.17 திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டம் மாவட்ட கலெக்டர் பிரத்திக் தாயள் தலைமையில் நடைபெற்றது.கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை மனுவாக எழுதி கொடுத்தனர். இந்நிலையில் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகவளாகத்திற்கு வெளியே தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் அயிலை சிவசூரியன்,
தமிழ் மாநில காங்கிரஸ் விவசாய அணி மாவட்ட தலைவர் புங்கனூர் செல்வம், மாநில நிர்வாகி வயலூர் ராஜேந்திரன் உள்ளிட்ட விவசாயிகள் ஏராளமானவர்கள் காய்ந்த வாழை கன்றுடன் கலெக்டர் அலுவலகத்தில் நுழைவாயிலில் நின்று கோஷம் எழுப்பினார்கள். திருச்சி மாவட்டத்தில் பொதுமக்கள், கால்நடை மற்றும் அத்தியாவசிய தேவைக்கும்,குடிநீருக்கும் நிலத்தடி நீருக்கும் உய்யக் கொண்டான், ராமவாத்தலை புதுவாத்தலை உள்ளிட்ட திருச்சி மாவட்ட பாசனை கிளை கால்வாய்களுக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என வலியுறுத்தினார்கள்.அப்பொழுது விவசாயிகள் ஜெகதீசன், ரவி, ராகுல், ரத்தனம், ராமு, தனபால், பொன்னுச்சாமி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர். பிறகு கலெக்டர் பிரத்திக் தாயளிடம் கோரிக்கை மனு அளித்தனர்.