விவசாயிகளுக்கு நன்னெறி வேளாண் முறைகள் பண்ணைப்பள்ளி
திருச்சி, ஆக.19 திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பூவாளூர் கிராமத்தில் அட்மா திட்டத்தில் விவசாயிகளுக்கு நன்னெறி வேளாண் முறைகள் பண்ணைப்பள்ளி வேளாண்மை உதவி இயக்குநர் சத்யபிரியா தலைமையில் நடைபெற்றது. விவசாயிகள் கோடை உழவு, மண்மாதிரி சேகரிப்பு,பசுந்தாளுரபயிர்கள் விதைப்பு செய்தல்,சான்று பெற்ற விதைகள் பயன்படுத்துதல் பற்றி விரிவாக விளக்கி கூறினார்.
வேளாண்மை கல்வி நிறுவனம் குமுளூர் முனைவர் விஜய் பேசுகையில் (Good Agricultural Practices – GAP) என்பது நுகர்வோருக்குப் பாதுகாப்பான, சுகாதாரமான உணவுப் பொருட்களை வழங்குவதற்கும், சுற்றுச்சூழல் மற்றும் மண்வளத்தைப் பாதுகாப்பதற்கும் சர்வதேச அளவில் பின்பற்றப்படும் ஒரு வேளாண் மேலாண்மை முறையாகும்
விவசாயிகள் தங்கள் பண்ணைகளில் நன்னெறி உத்திகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் தரமான மற்றும் நச்சுத்தன்மையற்ற விளைபொருட்களை உற்பத்தி செய்ய முடியும்.
நிலம் மற்றும் மண் மேலாண்மை:
ரசாயன உரங்களை விடுத்து அதிகப்படியான கரிமப் பொருட்கள் (மக்கின தொழு உரம், மண்புழு உரம்) இட்டு மண்வளத்தைப் பேண வேண்டும்.பாதுகாப்பான நீர் மேலாண்மை: தூய்மையான நீரைப் பாசனத்திற்குப் பயன்படுத்த வேண்டும். சொட்டுநீர் போன்ற நுண்பாசன முறைகள் மூலம் நீர் வீணாவதைத் தடுக்க வேண்டும்.
பூச்சி மற்றும் நோய் மேலாண்மை:
வேதிப் பூச்சிக்கொல்லிகளைத் தவிர்த்து, உயிரியல் கட்டுப்பாட்டு முறைகள் (Biological Controls) மற்றும் இயற்கை பூச்சி விரட்டிகளைப் பயன்படுத்த வேண்டும்.
பண்ணை பதிவேடுகள் (Farm Records):
விதைகள், உரங்கள் மற்றும் இடுபொருட்கள் வாங்கிய விவரங்கள் மற்றும் பயன்படுத்திய தேதிகளைத் துல்லியமாகப் பதிவேடுகளில் பராமரிக்க வேண்டும்.பாதுகாப்பான அறுவடை:
பயிர்களைச் சுகாதாரமான முறையில் அறுவடை செய்து, நுகர்வோருக்குத் தகுந்த பாதுகாப்பான பேக்கிங் முறைகளுடன் சந்தைப்படுத்த வேண்டும். என விவசாயிகளுக்கு விரிவாக விளக்கி கூறி நெல் வயல் பார்வையிட்டு தற்போது சத்து பற்றாக்குறை உள்ள வயல்களில் தலை மணி சாம்பல் சத்து19 நீரில் கரையும் உரம் 100 கிராம்+சிங் 12% 20 கிராம் உடன் ஒட்டும் பசை 20 மில்லி ஒரு டேங்க் கலந்து தெளிக்க வேண்டும்.
நெல் சிலந்தி பூச்சி சேதம் கட்டுபடுத்த நனையும் கந்தகம் 500gm+(Profenofos 40% + Cypermethrin 4% EC)350 ml+ஒட்டும் பசை 100 மில்லி ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க பரிந்துரை செய்யப்பட்டது.
இப் பண்ணைப்பள்ளிக்கான ஏற்பாட்டினை அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் சபரிச்செல்வன் உதவி தொழில் நுட்ப மேலாளர்கள் கார்த்திக், தமிழ்மணி ஆகியோர் செய்து இருந்தனர்