மது அருந்துவதில் ரவுடிகளுக்குள் தகராறு: பீர் பாட்டிலால் தாக்குதல்

0 20
Stalin trichy visit

திருச்சி, ஆக. 19 திருச்சி மாவட்டம்,  மண்ணச்சநல்லூர் அடுத்த சா.அய்யம்பாளையம் அருகே உள்ள சாலக்காடு பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார் (30). தொழிலாளியான இவரும், திருவானைக்காவலை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான அய்யனார் (23), கொள்ளிடம் நம்பர் ஒன்டோல்கேட் பகுதியைச்சேர்ந்த ஐயப்பன் என்கிற அய்யனார் (36), மண்ணச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடியான பட்டாசு பாலு (36) ஆகியோர் நேற்று முன்தினம் கருங்காடு அரசு மதுபான் கடை எதிரே அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் 3 பேர் சேர்ந்து ஐயப்பனை தாக்கி விட்டு ஓடி விட்டனர்.

இந்நிலையில், ஐயப்பன் சமயபுரம் நால்ரோடு அரசு மதுபான கடை எதிரே நின்று கொண்டு பட்டாசு பாலுவிற்கு போன் செய்து முடிந்தால் இங்கு வந்து என்னை தாக்கிப் பார் என்று கூறியதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து அங்கு வந்த பட்டாசு பாலு மற்றும் சிலர் ஐயப்பனை பீர் பாட் டிலால் தாக்கியும், கத்தியால் கிழித்து விட்டும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இது குறித்த புகாரின் பேரில் சமயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நந்தகுமார், அய் யனார் ஆகியோரை கைது செய்தனர். பட்டாசு பாலுவை போலீசார் தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.