பேத்தியை கர்ப்பமாக்கிய தாத்தா போக்சோ சட்டத்தில் கைது

0 13
Stalin trichy visit

திருச்சி, ஆக. 28  திருச்சியை அடுத்துள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமி, அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்துவருகிறார்.

கடந்த சில நாட்களாக அந்த சிறுமிக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி, சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு சிறுமியின் தாய் அழைத்து சென்றார். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த டாக்டர், அந்த சிறுமி கர்ப்பமாக இருப்பதாக கூறினார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய், இது குறித்து ஜீயபுரம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அந்த சிறுமியின் கர்ப்பத்திற்கு அவரது தாத்தாவான 65 வயது முதியவர்தான் காரணம் என்பது தெரியவந்தது. இதுகுறித்து ஜீயபுரம் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் யசோதா போக்சோ சட்டத் தில் வழக்குப்பதிவு செய்து, அந்த முதியவரை கைது செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.