திருச்சி தென்னூர் மின்வாரிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
திருச்சி தென்னூர்மின்வாரிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை – 1.05 லட்சம் இணையவழி பணப் பரிமாற்றம் கண்டுபிடிப்பா?
திருச்சி தென்னூர் பகுதியில் உள்ளமின்வாரிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி மணிகண்டன் தலைமையில் 9 குழுக்களாகப் பிரிந்து, மின்வாரிய அலுவலகத்துடன் தொடர்புடைய 9 அலுவலகங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர்
இந்த சோதனையின்போது, இணையவழி மூலம் ரூ.1 லட்சத்து 5 ஆயிரம் பணப் பரிமாற்றம் நடைபெற்றிருப்பது தொடர்பான தகவல்கள் கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, அந்த பணப் பரிமாற்றம் எதற்காக மேற்கொள்ளப்பட்டது? யாருடைய கணக்கில் இருந்து யாருடைய கணக்கிற்கு பணம் சென்றது? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒரே நேரத்தில் 9 இடங்களில் நடைபெற்ற இந்த சோதனை, மின்வாரிய வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.