பட்டிமன்ற நடுவருக்கு சிறுகதைகள் நூல் நினைவு பரிசாக வழங்கல்
திருச்சி, செப்.30 திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே வாழையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குணா. இவர் எழுதிய சிறுகதைகள் புத்தகமாக வெளிவந்துள்ளது. இந்நிலையில் கோவில்பட்டி உண்ணாமலை கல்லூரியில் நடைபெற்ற புதுயுகம் தொலைக்காட்சியின் சவாலே சமாளி என்ற பேச்சரங்கம் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வருகை தந்திருந்த கலைமாமணி பேராசிரியர் முனைவர் ஞானசம்பந்தன் அவர்களை மருதம் இலக்கியப் பேரவை சார்பில் சந்தித்து பொன்னாடை அணிவித்து திருச்சி வாழையூர் குணா எழுதிய நூலை பரிசளித்து வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் கோவில்பட்டி தவெக நிர்வாகி செண்பகராஜன், தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளர் பாலசுப்ரமணியன், ஆசிரியர் ராதாகிருஷ்ணன், முனைவர் சம்பத்குமார், முனைவர் ஞானசம்பந்தன், ஆசிரியர் செல்லையா, நல்லாசிரியர் ஆறுமுகசாமி மற்றும் ஆசிரியர் செல்வின் ஆகியோருடன் அரசியலும் இலக்கியமும் சம்பத்குமார் தனது குழுவினருடன் வாழையூர் குணா எழுதிய சிறுகதைகள் நூலினை நினைவு பரிசாக வழங்கினர்.