திருச்சி வழக்கறிஞர் சங்க ஆண்டு விழாவை முன்னிட்டு விளையாட்டுப் போட்டிகள்

0 13
Stalin trichy visit

திருச்சி, நவ.24  திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர் சங்க ஆண்டு விழாவை முன்னிட்டு விளையாட்டுப் போட்டிகள்  திருச்சி கல்லுக்குழி ரயில்வே மைதானத்தில் நடைபெற்றது போட்டியினை மாவட்ட நீதிபதி M.கிறிஸ்டோபர் மற்றும் தலைமை குற்றவியல் நீதிபதி N.செந்தில் முரளி ஆகியோர்கள் கலந்து கொண்டு துவக்கி வைத்தனர். மேலும் ஓட்டப் பந்தயம் ஈட்டி ஏறுதல் ஆகிய போட்டிகளில் கலந்து கொண்டனர்.

போட்டியினை திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர் சங்க செயலாளர் ஆரோக்கியசாமி, துணைத் தலைவர் சுதா இணைச் செயலாளர்கள் ராஜா ரவி வர்மா,சுபாஷ்டி பொருளாளர் பிரதீப்
செயற்குழு உறுப்பினர்கள் ஷானவாஸ்,சுவாதி சுரேஷ், சிவா, ராஜ்குமார், சேது மாதவன், பாஸ்கர், சாய்நாதன்,சசிகுமார், கேசவன் ஆகியோர் நடத்தினார்கள். நிகழ்ச்சியில்
100 மீட்டர் ரன்னிங் ரேஸ், வேகமாக நடத்தல், கபடி போட்டி, கொக்கோ போட்டி, ஈட்டி எறிதல் போட்டி குண்டு எறிதல் போட்டி தட்டு எறிதல் போட்டி , கிரிக்கெட் போட்டி, குழந்தைகளுக்கான போட்டிகள் நடைபெற்றன.

நிகழ்ச்சியில் ஏராளமான வழக்கறிஞர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு மகிழ்ந்தனர். மேலும் நிகழ்ச்சியில் முன்னாள் அரசு வழக்கறிஞர்கள் ஜெயராமன், சவரிமுத்து முன்னாள் தலைவர் S. P. கணேசன், கங்கைச்செல்வன், குற்றவியல் வழக்கறிஞர் சங்கத் தலைவர் முல்லை சுரேஷ், துணைத் தலைவர்கள் சசிகுமார், பிரபு, செயலாளர் P. V. வெங்கட் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.