டாக்டர் அப்துல் கலாம் 95-வது பிறந்தநாள் விழா: குமுளூர் வேளாண்மைக் கல்வி நிறுவனத்தில் 95 மரக்கன்றுகள் நடவு

0 16
Stalin trichy visit

திருச்சி, அக்.16  டாக்டர் அப்துல் கலாம் 95-வது பிறந்தநாள் விழா: குமுளூர் வேளாண்மைக் கல்வி நிறுவனத்தில் 95 மரக்கன்றுகள் நடவு.

முன்னாள் குடியரசுத் தலைவர், ஏவுகணை நாயகன் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்  95-வது பிறந்தநாள் மற்றும் உலக மாணவர் தினத்தை முன்னிட்டு திருச்சி லால்குடி அருகே மாவட்டம் குமுளூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் வேளாண்மைக் கல்வி நிறுவனத்தில் 95 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி 15.10.2026 அன்று  நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியைக் கல்லூரி முதல்வர் முனைவர் மு. அசோகன் தொடங்கி வைத்து மரக்கன்றை நட்டார். இதனைத் தொடர்ந்து கல்லூரி வளாகத்தில் 95 மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்நிகழ்ச்சியில் 350-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் முனைவர். மு. அசோகன், மாணவர்கள் டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் வாழ்க்கை வரலாறு, அறிவியல் சிந்தனை, கடின உழைப்பு, எளிமை மற்றும் நாட்டுப்பற்றை முன்னுதாரணமாகக் கொண்டு செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவதுடன், நாட்டின் வளர்ச்சிக்கும் சமூக முன்னேற்றத்திற்கும் பங்களிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

மேலும், மரங்கள் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதிலும், பசுமையான சூழலை உருவாக்குவதிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. எனவே, மரக்கன்றுகளை நடுவதோடு மட்டுமல்லாமல், அவற்றைத் தொடர்ந்து பராமரித்து வளர்ப்பதும் ஒவ்வொருவரின் கடமையாகும். மாணவர்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மரம் வளர்ப்பின் அவசியத்தை உணர்ந்து, சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் எடுத்துரைத்தார்.

டாக்டர் அப்துல் கலாம்  95-வது பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் 95 மரக்கன்றுகள் நடப்பட்ட இந்நிகழ்ச்சி, அவரது நினைவைப் போற்றுவதோடு, மாணவர்களிடையே இயற்கைப் பாதுகாப்பு மற்றும் பசுமைச் சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் சிறப்பான முயற்சியாக அமைந்தது.

மரம் வளர்ப்போம் மண்ணையும் மனித வாழ்வையும் பாதுகாப்போம் என்ற பசுமைச் செய்தியை வலியுறுத்தும் வகையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. மரக்கன்றுகள் நடம் விழாவினை இக்கல்லூரியின் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் ஒருங்கிணைப்பாளர் முனைவர்.இரா.வினோத் அவர்கள் ஏற்பாடு செய்தார். இந்நிகழ்ச்சியில் 350-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் பங்கேற்று, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் தங்களது பங்களிப்பை வெளிப்படுத்தினர்.

Leave A Reply

Your email address will not be published.