கொள்முதல் விலை உயர்வால் மாநிலம் முழுவதும் கூடுதலாக 3.5 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் : அமைச்சர் விஜயலட்சுமி பேட்டி

0 40
Stalin trichy visit

திருச்சி அக் 15  தமிழக பால்வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமி திருச்சி கொட்டப்பட்டு பகுதியில் அமைந்துள்ள ஆவின் நிறுவனத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, நுகர்வோரின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ஆவின் நிறுவனத்தின் புதிய தயாரிப்புகளான 500 மில்லி லிட்டர் பிரீமியம் பால் பாக்கெட், கேன்டி குச்சி ஐஸ் மற்றும் 5 ரூபாய் விலையிலான தயிர் கப் ஆகியவற்றை விற்பனைக்காக அவர் அறிமுகப்படுத்தினார்.
இதனைத் தொடர்ந்து அமைச்சர் விஜயலட்சுமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

தமிழகம் முழுவதும் தற்போது தினசரி 32 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. தமிழக அரசின் உத்தரவின்படி பால் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளதால், அடுத்த ஒரு மாதத்திற்குள் மாநிலம் முழுவதும் கூடுதலாக 3.5 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருச்சியில் இதற்கு முன்பு 1.75 லட்சம் லிட்டராக இருந்த தினசரி பால் கொள்முதல், தற்போது 1.90 லட்சம் லிட்டராக உயர்ந்துள்ளது. அரசு அறிவித்துள்ள பால் கொள்முதல் விலையில், விவசாயிகளின் நலனுக்காகக் காப்பீட்டுத் திட்டத்திற்காக 1 ரூபாய் மட்டுமே பிடித்தம் செய்யப்படுகிறது. இந்தத் தொகையும் பின்னர் முழுமையாக விவசாயிகளிடமே திரும்ப ஒப்படைக்கப்பட்டு விடுகிறது என அமைச்சர் விஜயலட்சுமி தெரிவித்தார்.
இந்நிகழ்வின் போது ஆவின் உயர் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உடனிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.