திருச்சி மாவட்ட நீதிமன்றத்தில் குற்றவியல் வழக்கறிஞர் சங்கம் சார்பில் நடைபெற்ற சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை விழா
திருச்சி, அக்.17 திருச்சி நீதிமன்ற குற்றவியல் வழக்கறிஞர் சங்கம் சார்பில் நடந்த சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி விழா – மாண்புமிகு நீதிபதிகள் பங்கேற்பு:-
திருச்சி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள குற்றவியல் வழக்கறிஞர் சங்க அலுவலகத்தில் சரஸ்வதி பூஜை ஆயுத பூஜை, விஜயதசமி மற்றும் மூத்த வழக்கறிஞர் திரு ஸ்டானிஸ் லாஸ் அவர்களின் 89-ஆவது பிறந்தநாள் விழா மாண்புமிகு முதன்மை மாவட்ட நீதிபதி கிறிஸ்டோபர் அவர்கள் தலைமையில் குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத்தில் இன்று கொண்டாடப்பட்டது.
இந்த விழாவிற்கு திருச்சிராப்பள்ளி மாண்புமிகு முதன்மை மாவட்ட நீதிபதி கிறிஸ்டோபர் தலைமை வகித்தார் மூத்த வழக்கறிஞர் ஸ்டானிஸ்லாஸ் மற்றும் குடும்ப நல நீதிமன்றத்தின் மாண்புமிகு நீதிபதி மாலதி, கூடுதல் மகிழா நீதிமன்றத்தின் மாண்புமிகு நீதிபதி முத்துமீனா, j m1 நீதிமன்றத்தின் மாண்புமிகு நீதிபதி அனு சுருதி, j m 3 நீதிமன்றத்தின் மாண்புமிகு நீதிபதி முகமது சுகைல், j m 2 நீதிமன்றத்தின் மாண்புமிகு நீதிபதி பரம் வீர், j m 6 நீதிமன்றத்தின் மாண்புமிகு நீதிபதி சுப்பிரமணி, j m 5 நீதிமன்றத்தின் மாண்புமிகு நீதிபதி டார்வின் முத்து ஆகியோர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் குற்றவியல் வழக்கறிஞர் சங்கத் தலைவர் முல்லை சுரேஷ், செயலாளர் வெங்கட், துணைத் தலைவர்கள் வரகனேரி சசிகுமார் மற்றும் பிரபு, இணைச் செயலாளர் விஜய் நாகராஜன் முன்னாள் அரசு வழக்கறிஞர்கள் சவரிமுத்து, ஜெயராமன், இரண்டாவது கூடுதல் நீதிமன்ற அரசு வழக்கறிஞர் எழிலரசி, செயற்குழு உறுப்பினர்கள் புவனேஸ்வரி, பிரியா, கௌசல்யா, ரத்தன கிரி, முனீஸ்வரன், மீனா, பாலாஜி, ரங்கீலா, கனிமொழி மற்றும் வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.