மணல் குவாரிகளை திறக்க வலியுறுத்தி மணல் லாரி உரிமையாளர்கள் போராட்டம்

0 16
Stalin trichy visit

திருச்சி அக் 16 – தமிழ்நாடு மணல் உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள மண்டல பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்று முற்றுகை போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மாநில தலைவர் ராசாமணி தலைமை தாங்கினார்.செயலாளர் ரவிக்குமார், பொருளாளர் ராமசாமி ஆகியோர் முன்னிலை வைத்தனர் . ஆர்ப்பாட்டத்தில்
கடந்த 12.9.2023 அன்று தமிழகம் முழுவதும் நடைபெற்று வந்த அரசு மணல் குவாரிகளில் முறைகேடாக அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் மணல் எடுத்ததாக அமலாக்கத்துறை குவாரிகளை சோதனை செய்து வழக்கு பதிவு செய்யப்பட்டது, இதனால் கடந்த மூன்று ஆண்டு காலம் மணல் குவாரிகள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால்.இந்த தொழிலில் முழு நேரம் ஈடுபட்டுள்ள சுமார் 55 ஆயிரம் மணல் லாரி உரிமையாளர்கள், லட்சக்கணக்கான ஓட்டுநர்கள், பல்லாயிரக்கணக்கான மாட்டு வண்டி தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு உள்ளது.

எனவே தமிழக முதலமைச்சர் விஜய் நடவடிக்கை எடுத்து காவிரி ஆறு, பாலாறு உட்பட அனைத்து ஆறுகளையும் ஆய்வு செய்து எங்கெங்கு மணல் தட்டுகள் அதிக அளவில் தேங்கியுள்ளதோ அந்த பகுதியை கண்டறிந்து மணல் குவாரி திறந்து முறைகேடுகள் இன்றி இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இது குறித்து அமைச்சர் மட்டும் அதிகாரிகள் எங்கள் சங்கத்துடன் பேச்சு வார்த்தை நடத்தி மணல் பாறைகளை திறக்க உத்தரவாதம் கிடைத்தால் தான் இந்த இடத்தில் இருந்து செல்லுவோம் என்று கூறி சர்வீஸ் ரோடு சாலையில் மணல் லாரி உரிமையாளர்கள் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்
இந்த போராட்டத்தில் தமிழகம் முழுவதும் உள்ள மணல் லாரி உரிமையாளர்கள் ஓட்டுநர்கள் மாட்டுவண்டி தொழிலாளர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.