கூட்டணி கட்சிகள் இல்லை என்றால் இடைத்தேர்தலில் திமுக டெபாசிட் இழந்திருக்கும்: துரை.வைகோ பேட்டி
திருச்சி, அக்.17 கூட்டணி கட்சிகள் இல்லை என்றால் இடைத்தேர்தலில் திமுக டெபாசிட் இழந்திருக்கும் – திருச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் துரை.வைகோ பரபரப்பு பேட்டி….
திருச்சி மன்னார்புரத்தில் ஒரு கோடி 40 லட்சம் செலவில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிறுத்தத்தை திருச்சி நாடாளுமன்ற உறுப்பினரும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதன்மைச் செயலாளருமான துரை.வைகோ திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள் மருத்துவர் ரொகையாபேகம், வெல்லமண்டி சோமு, மணவை மாணிக்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மனப்பாட சட்டமன்ற உறுப்பினர் சக்தி என்று ஆற்றலரசு, காங்கிரஸ் கட்சியின் திருச்சி மாநகர மாவட்ட தலைவர் ரெக்ஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நாடாளுமன்ற உறுப்பினர் துரை.வைகோ…
மேரிஸ் பாலம் பொருத்தவரை சஅதிகாரிகளை பார்த்து இது குறித்து பேசப்பட்டுள்ளது விரைவில் அதற்கான பணிகள் முடிவடையும் மேலும் திருச்சி மாநகராட்சி தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தி மேற்கொண்டு தாமதம் இல்லாமல் விரைவில் பணிகள் முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
கானா பாடல்களை அங்கீகாரம் கொடுத்தவர் காலம் சென்ற இசையமைப்பாளர் தேவா
தமிழ் திரைப்படத்திற்கு ஒரு பெரும் இழப்பாகும்.
திமுக கட்சியில் வாக்குச்சீட்டு முறை கொண்டு வர வேண்டும் SIR முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.
எஸ் வி ஆர் விவகாரத்தில் தவெக மவுனமா இருக்கிறது என்ற கேள்விக்கு …..
SIR தவறானது இதில் மாற்று கருத்தே கிடையாது இந்தியா கூட்டணி இதற்காக போராடுகிறது.
தலைமை தேர்தல் அதிகாரி ஞனேஷ்குமார் பதவி விலக வேண்டும் SIR தொடர்பான பணிகள் அனைத்தும் திரும்ப பெற வேண்டுமென என்பதில் மாற்று கருத்து கிடையாது.
கடந்த முறை ஆட்சியில் இருந்த முன்னாள் முதல்வர் ஸ்டாலின் இந்தியா முழுவதும் எஸ் ஐ ஆர் ஆல் பல பாதிப்பு உள்ளத கோடி கணக்கான வாக்காளர்கள் வாக்கு உரிமையை இழந்து உள்ளனர்.
ஆனால் தமிழகத்தில் அது நடக்கவில்லை காரணம் திராவிட முன்னேற்ற கழகம் என்று கூறி திமுகவின் தோழர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
ஆனால் இன்று எஸ் ஆர் ஆல் தான் முதல்வர் தோற்றதாக கருத்து நிலவுகிறது. அந்தக் கருத்தை பதிய வைக்கின்றனர்.
மக்களுடைய தீர்ப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
கல்வி கண் திறந்த காமராஜரும், பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டவர் ஐயா நல்லகண்ணும் ஆகியோர் தேர்தலில் தோற்ற உள்ளனர்.
தோற்று விட்டு நாங்கள் தோற்கவில்லை எனக் கூறுவது ஜனநாயகத்திற்கும் மக்கள் தீர்ப்புக்கும் எதிரானது.
விஜய் வெற்றியை கொச்சப்படுத்துவது தவறான அணுகுமுறை.
சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலில் கூட்டணி கட்சிகள் போய்விட்டார்கள் பாதிப்பில்லை என்று கூறினார்கள்.
ஏன் தேமுதிகவின் பிரேமலதாவும் கொங்கு மக்கள் கட்சியை ஈஸ்வரன், மற்றும் ஜாவஹிருல்லா, தமீமுன்அன்சாரி தெருத் தெருவாக சென்று ஓட்டு கேட்டார்கள்.
திமுக கூட்டணியில் நாங்கள் ஏமாந்தோம் அங்கு இருப்பவர்கள் யாரும் ஏமாறாதீர்கள்.
மதுராந்தகம் மற்றும் தாராபுரத்தில் 100 கோடிக்கு மேல் செலவு செய்துள்ளனர் ஆனால் தவெக ஒத்த பைசா செலவு செய்யாமல் வேட்பாளர்கள் ஜெயித்துள்ளனர்.
திமுக தன்னைச்யாக வாங்கின ஓட்டுக்கள் 30ஆயிரம் கிடையாது.
கூட்டணிக் கட்சிகள் வாக்கை கழித்தால் திமுகவுக்கு டெபாசிட் கிடைத்திருக்காது.
திருச்சி கிழக்கில் மதிமுக போட்டியிடுமா என்ற கேள்விக்கு …
அது தலைமை தலைவர் வைகோ தான் முடிவு செய்வார்.
பெல் நிறுவனத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெற வேண்டும் என்பதற்காக தொடர்ந்து பேசி வருகிறீர்கள் அதில் பலர் ஏதும் கிடைத்ததா என்ற கேள்விக்கு ……
பெல் நிறுவனத்தில் பெரும்பாலும் வடநாட்டை சேர்ந்தவர்கள்
தமிழ்நாட்டை சேர்ந்தவர்களின் பங்களிப்பு மிகவும் குறைவு.
பல்வேறு கட்சியினரும் மதிமுக தொடர்ந்து கோரிக்கை வைக்கின்றனர்.
பெல் நிறுவனம் மட்டுமல்ல தமிழ்நாட்டில் உள்ள பொதுத் தேர்வு நிறுவனங்கள் அனைத்திலும் தமிழுர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்ற கருத்தை முன் வைத்திருக்கிறேன் என தெரிவித்தார்.