விசிக நிர்வாகியின் மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய தலைவர் தொல் திருமாவளவன்
திருச்சி, அக்.17 விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவன் அரியலூர் மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னையிலிருந்து விமான மூலம் சர்வதேச திருச்சி விமான நிலையத்திற்கு வந்தடைந்தார் அவருக்கு திருச்சி மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அப்போது கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் சட்டமன்றத் தொகுதி வேப்பூர் பகுதியைச் சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட துணை செயலாளர் பெரியசாமி தனது குடும்பத்துடன் வந்திருந்து தனது இளைய மகள் ரித்திகா தேவியின் பிறந்த நாளை முன்னிட்டு தலைவர் தொல் திருமாவளவன் அவர்களுக்கு பணமாலை தலை கிரீடம் அணிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் பிறந்தநாள் கேக் வெட்டி குழந்தைகளுக்கு ஊட்டி பிறந்த நாள் வாழ்த்து கூறினார். இந்த நிகழ்வில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் கிட்டு, மாவட்ட செயலாளர் புல்லட் லாரன்ஸ் மற்றும் மாநில மாநகர மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.