பொய் புகாரில் விசாரணை என்கிற பெயரில் அத்துமீறும் காவல் துறையினர் : நரிக்குறவர் இளைஞர்கள் புகார்

0 16
Stalin trichy visit

திருச்சி, அக்.17 தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பசுபதி கோவில் நரிக்குறவர் காலனி சேர்ந்தவர் ராமராஜ் (வயது 30),இவர் இன்று அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி கழக தலைவர் வழக்கறிஞர் பொன் முருகேசன் தலைமையில் திருச்சி ஐஜி அலுவலகத்தில்
புகார் மனு அளித்தார் அதில் அவர்கள் கூறியிருப்பதாவது;

நாங்கள் படிப்பறிவு இல்லாத விளிம்பு நிலை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்னையும் எனது உறவினர்கள் மூவரையும் அரியலூர் மாவட்டம் திருமானூர் காவல் நிலைய ஆய்வாளர் வனிதா மற்றும் கீழப்பழுவூர் காவல் நிலைய அதிகாரி செந்தில் மாறன் மற்றும் எஸ் பி ஸ்பெஷல் டீமைச் சேர்ந்த காவலர்கள் சிலர் திருட்டு வழக்கு சம்பந்தமாக விசாரணை என்ற பெயரில் வீட்டில் இருந்த எங்களை அத்துமீறி அழைத்துச் சென்று கண்ணைக் கட்டி மூன்று நாட்கள் அடித்து உதைத்து சித்திரவதை செய்தனர்.

மேலும் பொய் வழக்கு போட்டு எங்களை திட்டமிட்டு கைது செய்து விட்டனர், நாங்கள் தற்போது ஜாமீனில் வந்துள்ளோம்.
நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை ஆகவே சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் மீது பி. என்.எஸ். சட்டத்தின் கீழ் எஸ்சி – எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.

இந்த விவகாரம் குறித்து வழக்கறிஞர் பொன் முருகேசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அப்போது பேசிய அவர்,

ஊசி பாசி விற்பனை செய்தும், கிடைக்கின்ற வேலைக்கு சென்றும் வயிற்றை வளர்த்து வரும் பசுபதி கோவில் பாபநாசம் பட்டித்தோப்பு நரிக்குறவர் காலனியில் வசித்து வரும் இந்த இளைஞர்கள் அப்பாவிகள்.

இவர்களுக்கும் திருட்டு சம்பவத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை ஆனால் காவல்துறையினர் வேண்டுமென்றே திட்டமிட்டு அவர்களை பலவந்தமாக தாக்கி கடைக்கடையாக கூட்டி சென்று இந்த கடையில் இவ்வளவு நகையை கொடுத்தோம் என்று பொய் வழக்கு போட்டு திடுட்டு பட்டம் கட்டி இளைஞர்களை பழிவாங்குகிறார்கள்.

சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் இது குறித்து மதுரை உயர்
நீதிமன்றத்தில் நாங்கள் வழக்குத் தொடுக்க உள்ளோம் – மேலும் இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்ய கோரிக்கை வைக்க உள்ளோம்.

Leave A Reply

Your email address will not be published.