திருச்சியில் முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டியில் முறைகேடு: மாணவிகள் குமுறல்

0 17
Stalin trichy visit

திருச்சி, அக்.20  திருச்சியில் முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டியில் முறைகேடு மாணவிகள் குமுறல்

திருச்சியில் முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. இதில் மல்லர் கம்பம் போட்டி ஞாயிறு, திங்கள் இரண்டு நாட்கள் நடைபெற்றது. இதில் நடுவர்களாக சென்னையைச் சேர்ந்த 3 பேர் விழுப்புரம் மாவட்டத்தை 2 பேர் என 5 பேர் அமர்ந்திருந்தனர்.

நேற்று பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான மல்லர் கம்ப போட்டியும் இன்று பள்ளி கல்லூரி மாணவிகளுக்கான போட்டியும் நடைபெற்றது. இதில் நடுவர்களாக அமர்ந்திருந்த ஐந்து பேரில் ராமச்சந்திரன் மற்றும் சங்கீதா இருவரும் கணவன் மனைவி ஆவார் , பிரகாஷ், முருகன், சிவதர்ஷினி என இந்த 5 பேரும் தனியாக மல்லர் கம்பம் அகாடமி நடத்தி வருகின்றனர் . இதில் ராமச்சந்திரன் மற்றும் சங்கீதா இருவரும் நடுவர்களாக கலந்து கொள்ளும் போட்டிகளில் அவர்களது அகடமியைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொள்ளும் போது ஒருதலைபட்சமாக செயல்பட்டு அவர்களுக்கு ஆதரவாக அதிக மதிப்பெண்களை அளித்து வருவதாக கூறப்படுகிறது.

நேற்று திருச்சியில் நடைபெற்ற முதல்வர் கோப்பைக்கான போட்டியிலும் அவர்கள் அகாடமியை சேர்ந்த சஞ்சனா என்ற பள்ளி மாணவிக்கு அதிக மதிப்பெண் அளித்தும், அவரை விட திறமையாக செயல்பட்ட முத்தரசி என்ற மாணவிக்கு குறைந்த மதிப்பெண் அளித்ததாக கூறி முத்தரசியின் பயிற்சியாளர் , மற்ற மாணவிகள், பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட விளையாட்டு அலுவலரிடம் புகார் தெரிவித்தனர். மேலும் போட்டியை முடிவு தெரியும் வரை நடத்தக்கூடாது எனக் கூறி தற்பொழுது போட்டியை நிறுத்தி வைத்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.