திருச்சி பீமநகரில் மணப்புரம் கோல்டு பைனான்ஸ் நிதி நிறுவனத்தின் 7-வது கிளை திறப்பு

0 18
Stalin trichy visit

திருச்சி, அக்.24 திருச்சி பீமநகர் பகுதியில் மணப்புரம் கோல்டு பைனான்ஸ் நிதி நிறுவனத்தின் 7-வது கிளையை ராக்போர்ட் டைம்ஸ் வார இதழின் முதன்மை செய்தி ஆசிரியர் லெஷ்மி நாராயணன் திறந்து வைத்தார்.

‎திருச்சி பீமநகர் பகுதியில் மணப்புரம் கோல்டு பைனான்ஸ் நிதி நிறுவனத்தின் 7-வது புதிய கிளை திறப்பு விழா நேற்று  நடைபெற்றது. இந்த திறப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக திருச்சி ராக்போர்ட் டைம்ஸ் வார இதழ் முதன்மை செய்தி ஆசிரியர் லெஷ்மி நாராயணன் கலந்து கொண்டு புதிய கிளையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி வைத்தார்.
‎
‎திருச்சி மாவட்டத்தில் மணப்புரம் கோல்டு பைனான்ஸ் நிதி நிறுவனம் கருமண்டபம், கேகே நகர், சங்கிலியாண்டபுரம், மேல சிந்தாமணி, பெட்டவாய்த்தலை, உப்பிலியபுரம் மற்றும் தொட்டியம் உள்ளிட்ட பகுதிகளில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது அந்த வகையில் மனப்புரம் கோல்டு பைனான்ஸ் நிதி நிறுவனத்தின் 7-வது கிளை பீம நகர் பகுதியில் திறக்கப்பட்டுள்ளது.
‎
‎இந்த விழாவில் மணப்புரம் கோல்டு பைனான்ஸ் நிதி நிறுவனத்தின் தமிழ்நாடு மண்டல தலைவர் நித்திஷ் விஸ்வநாத், திருச்சி மண்டல மேலாளர் முத்துக்குமார் மேலாளர் குமரேசன், கிளை மேலாளர் உதய், பாதுகாப்பு பிரிவு மண்டல மேலாளர் ராஜு மற்றும் வைர கற்கள் பிரபல தொழிலதிபர் பிரேம் ஆனந்த், காதர், பைசல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.